இந்திய கிரிக்கெட்

100வது டெஸ்டில் ஓய்வு பெற தோனியை கூப்பிட்டேன்.. ஆனா அடுத்து எதிர்பார்க்காத இது நடந்தது – அஸ்வின் பேச்சு

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சூழல் பந்துவீச்சாளரும் தற்போது சிஎஸ்கே அணியின் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தான் நூறாவது டெஸ்ட் ஓய்வு பெற இருந்ததும் அதற்கு தோனியை அழைத்ததும் சம்பந்தமாக சுவாரசியமான விஷயத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சமீபத்தில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி முடிந்ததும் திடீரென தனது ஓய்வு முடிவை ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்ததோடு, உடனடியாக இந்திய அணியை விட்டு விலகி ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா வந்தார்.

இமாச்சல் தரம்சாலா டெஸ்ட்

இதற்கு முன்பாக 2024ஆம் ஆண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களின் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி இந்தியா வந்தது. அந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நூறாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

இந்த சிறப்பு மிகுந்த டெஸ்ட் போட்டிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தனது குடும்பத்தினரை அழைத்து வந்திருந்தார். மேலும் அவருக்கு ராகுல் டிராவிட் முக்கியமான நினைவு பரிசை வழங்கினார். மேலும் அந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை நான்குக்கு ஒன்று என அபாரமான முறையில் வென்றது.

- Advertisement -

ஓய்வு பெற தோனியை அழைத்தேன்

இந்த நிலையில் தனது சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு பெற முடிவு செய்ததாகவும், அதற்கு நினைவு பரிசை வழங்க மகேந்திர சிங் தோனியை தான் அழைத்ததாகவும், அப்போது அவரால் வர முடியாத நிலையில் தற்போது மிகப்பெரிய பரிசு ஒன்றை தனக்கு கொடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : அத்தனை விமர்சனங்களுக்கு நடுவில்.. என்னை காப்பாற்றியது இந்த ஒரு விஷயம்தான்.. என் சிறந்த நண்பன் அவர் – ஹர்திக் பாண்டியா

இதுகுறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “தரம்சாலாவில் நடைபெற்ற நான் விளையாடிய என்னுடைய நூறாவது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு பெற நான் முடிவு செய்தேன். அப்பொழுது அங்கு என்னுடைய ஓய்வுக்கு நினைவு பரிசு வழங்க தோனியை அழைத்திருந்தேன். ஆனால் அப்போது அவரால் வர முடியவில்லை. இப்போது சிஎஸ்கே அணிக்கு என்னை வாங்கி அவர் இவ்வளவு பெரிய பரிசு தருவார் என்று நான் நினைக்கவில்லை. இதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts