நடப்பு ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடர் சுவாரசியமான கட்டத்தை எட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. தற்போது இந்த டி20 உலகக்கோப்பையில் எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கனித்திருக்கிறார்.
நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணி பாகிஸ்தான் அணியையும், கனடா அணி அயர்லாந்து அணியையும், ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியையும் தோற்கடித்திருக்கின்ற காரணத்தினால், அரை இறுதிக்கு தகுதி பெறக்கூடிய அணிகளின் பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய கணிப்பில் ஒரு அணியாக தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டிஸ் அணியை தேர்ந்தெடுத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணி சிறிய அணியான பப்புவா நியூ கினியா அணியிடம் போராடி 19 ஆவது ஓவரில்தான் வெல்ல முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இன்னும் பெரிய அணிகளுடன் மோத வேண்டிய போட்டிகள் எஞ்சி இருக்கின்றன.
அடுத்த அணியாக இந்திய அணியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வென்றிருக்கிறது. மேலும் நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. நாளைய போட்டியில் எந்த அணி வருகின்றதோ அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக மாறும்.
நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியும் அஸ்வின் அரை இறுதிக்கான அணியாகக் கூறியிருக்கிறார். ஸ்காட்லாந்து அணியுடன் மழையின் காரணமாக போட்டி டிரா ஆகியதால், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டி இங்கிலாந்து அணிக்கு முக்கிய போட்டியாக அமைகிறது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வி அடைந்தால், அவர்கள் இடம் பெற்றிருக்கும் குழுவில் நிறைய சுவாரசிய மாற்றங்கள் ஏற்படும்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனைக் கொண்டு வாங்க.. இந்த ஆல் ரவுண்டர் இந்திய அணியில் வேண்டாம்.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஓபன் டாக்
அடுத்ததாக ஆஸ்திரேலியா அணியை நான்காவது அணியாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆஸ்திரேலியா அணி ஒமான் அணியை வென்று இருக்கிறது. இன்று இங்கிலாந்து அணியுடன் மோத இருக்கிறது. இங்கிலாந்து அணி உடன் தோற்றாலும் கூட அடுத்து இருக்கும் சிறிய அணிகளை வென்றால், அவர்களால் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறி வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






