சஞ்சு சாம்சனைக் கொண்டு வாங்க.. இந்த ஆல் ரவுண்டர் இந்திய அணியில் வேண்டாம்.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஓபன் டாக்

0
2742

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பெற்று அடுத்த போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இந்திய அணி அயர்லாந்து அணியை வெற்றி பெற்ற பிறகு அடுத்த போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் தற்போது சரிசம பலத்துடன் விளங்குகிறது.

- Advertisement -

பேட்டிங்கை பொருத்தவரை ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் என்று பெரும்படை பேட்டிங் வரிசையில் இருக்கிறது. அதேபோல பந்துவீச்சில் அனுபவமும், வேகமும் கலந்து சிறப்பாக இருக்கிறது. இந்த இந்திய அணியில் சிவம் தூபே தற்போது ஆல்ரவுண்டராக அணியில் இருக்கிறார்.

பேட்டிங்கில் தற்போது ஐந்தாவது வரிசையில் களமிறங்கும் சிவம் தூபே பந்து வீச்சிலும் ஓரிரு ஓவர்களை மட்டுமே வீசுகிறார். இதனால் இவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை களம் இறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். இது இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தும் எனவும் கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“சிவம் துபே இந்திய அணியில் பந்து வீசப் போவதில்லை என கருதினால் அவரை விட சிறப்பான பேட்ஸ்மேன் ஆக சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவர் தூபவை விட பேட்டிங்கில் நல்ல அனுபவம் கொண்டவர். இதனால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை களம் இறக்கலாம். சாம்சன் முதிர்ச்சி அடைந்த வீரராக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

- Advertisement -

தற்போது பேட்டிங்கில் மெருகேறி சிறந்த அனுபவத்துடன் இருக்கிறார். அவரை சர்வதேச அளவில் இந்திய அணி பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மேலும் வலுவடையும்” என்று மஞ்சுரேக்கர் கூறி இருக்கிறார். முதல் பயிற்சி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக களமிறங்கிய சிவம் துபே பேட்டிங்கில் சற்று தடுமாறியே விளையாடினார்.

இதையும் படிங்க:பாகிஸ்தான் அணியை குறைவா நினைக்காதீங்க.. இதை மட்டும் அவங்க சரி பண்ணினா போதும் – எச்சரிக்கும் நவ்ஜோத் சிங் சித்து

எனவே அடுத்து வரவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தரமான பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இந்திய அணியின் பேட்டிங் நீளத்தை அதிகப்படுத்த வேண்டியிருக்கும். தற்போது எட்டாம் வரிசை வரை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அது இந்திய அணிக்கு கூடுதல் நன்மையாகவே கருதப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் அணியும் தனது முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் இந்த போட்டியை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று ஆர்வத்துடன் களமிறங்குவார்கள்.