இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் இங்கிலாந்து அணியின் 24 வயதான வலதுகை இளம் பேட்ஸ்மேன் ஒருவரை எதிர்காலத்தில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணித்திருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து கிரிக்கெட்டில் ஹாரி புரூக் எதிர்கால சூப்பர் ஸ்டாராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவர் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இருந்த போதிலும் அவருக்கு சுழல் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாற்றம் இருந்து வருகிறது. அவருடைய முதல் வருட ஐபிஎல் தொடரில் அது வெளிப்பட்டது.
இங்கிலாந்து கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரம்
இங்கிலாந்து மக்கள் ஒட்டுமொத்தமாக ஜோ ரூட்டுக்கு அடுத்து ஹாரி புரூக்கை தங்கள் எதிர்கால கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தாக்கம் மிகுந்த இன்னிங்ஸ்களை விளையாடக்கூடிய வகையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் 24 வயதான ஜேமி ஸ்மித் இருந்து வருகிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜானி பேர்ஸ்டோ நீக்கப்பட்ட பிறகு அவரது இடத்துக்கு இவர் கொண்டுவரப்பட்டார். மேலும் உள்நாட்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அத்துடன் இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் அறிமுகமானார். இதில் வருண் சக்கரவர்த்தியை அவர் விளையாடிய விதம் எல்லோரையும் கவனிக்க வைத்தது.
இவரைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
ஜேமி ஸ்மித் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இங்கிலாந்தை சேர்ந்த ஒரு இளம் பேட்ஸ்மேன் பற்றி நான் பேச விரும்புகிறேன். அவருடன் சேர்ந்து நான் ஆறு வருடங்களுக்கு முன்னால் கவுன்டி கிரிக்கெட் விளையாடினேன். அவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன. தற்பொழுது சர்ரே அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். இங்கிலாந்து மக்கள் சீக்கிரத்தில் ஒரு வீரரை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்த பையனுக்கு இன்னும் வெளிச்சம் கிடைக்கவில்லை”
இதையும் படிங்க : ஷமிய வச்சு திட்டம் இருக்கு.. அந்த 2 பேர் முடிவு செய்வாங்க – புது பேட்டிங் கோச் ஓபன் பேச்சு
“என் வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளவும். நான் சொல்கின்ற வீரர் ஜேமி ஸ்மித். அவர் மிகச் சிறப்பான இளம் வீரராக இருக்கிறார். சுழல் பந்துவீச்சுக்கு எதிராக அருமையாக விளையாடுகிறார். மேலும் அவருக்கு வேகப்பந்து வீச்சில் எந்த பிரச்சனையும் கிடையாது. அவர் எதிர்காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட்டில் பெரிய வீரராக வருவார்” என்று கூறி இருக்கிறார்.






