இந்திய கிரிக்கெட்

என் பந்தை 14 வயசு பையன் சூரியவன்சி ஆடின விதம்.. 18 வருஷ அனுபவத்துல பாக்கல – அஸ்வின் பாராட்டு

ஐபிஎல் தொடரில் தன்னுடைய பந்துவீச்சில் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்சி பேட்டிங் செய்த விதம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் பாராட்டி பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 1.10 கோடி ரூபாய்க்கு 14 வயது வைபவ் சூரியவன்சி வாங்கப்பட்டார். மேலும் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்து அசத்தினார். இத்துடன் 35 பந்தில் அதிரடியாக சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தார்.

அஸ்வின் உடனான மோதல்

சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய போட்டியில் அதுவரையில் வெறும் அதிரடியை மட்டுமே காட்டி வந்த வைபவ் சூரியவன்சி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் அடிக்க வேண்டிய பந்துகளை மிகச் சிறப்பாக அடித்து அரை சதமும் கடந்து ஆச்சரியப்படுத்தினார்.

இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது தனது பந்துவீச்சில் வலை விரித்த போதும் கூட வைபவ் சூரியவன்சி மிகவும் பொறுப்பாக விளையாடி அதை உடைத்தார். தற்போது சஞ்சு சாம்சன் உடனான ஒரு வீடியோ உரையாடலில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதை பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

நான் 18 வருஷம் அனுபவம் உள்ளவன்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு நான் அந்த அணியின் லீடிங் அனலைஸ்ட் ஷெட்டியிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் அவர் குறித்த ஒரு விஷயத்தை இப்போது உங்களுக்கு சொல்கிறேன். இது அவருடைய பவர் ஹிட்டிங் சம்பந்தப்பட்டது மட்டுமே கிடையாது. நான் ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து ஒரு பந்தை வீசினேன். அவர் அதை கவரில் அடித்தார். அடுத்து நான் ஒரு மெதுவான பந்தை வீசினேன். சஞ்சு நீங்கள் என் பந்துவீச்சில் கீப்பராக இருந்த அனுபவம் கொண்டவர். நீங்கள் அந்த பந்தை அவர் ஒரு பெரிய ஷாட் ஆடுவார் என்று நினைத்திருப்பீர்கள்”

இதையும் படிங்க : நான் சரியா ஆடல.. எனக்கு மன அழுத்தம் வந்துருச்சு.. இத செய்ய போறேன் – கருண் நாயர் பேச்சு

“நான் கொஞ்சம் அந்த பந்தை இழுத்து வைடாக வீசினேன். ஆனால் அந்த பையன் பொறுமையாக காத்திருந்து அந்த பந்தை மிட் ஆனில் அடித்து ஒரு சிங்கிள் எடுத்தார். எங்க இருந்து இந்த பையன் வந்தான் அப்படின்னு நான் அப்ப நினைச்சேன். அவருக்கு வயது 14 எனக்கு 18 வருஷம் ஐபிஎல் அனுபவமே இருக்கு. நான் அறிமுகமானப்ப அவருடைய பெற்றோர்களின் கற்பனையில் கூட இவர் கிடையாது. இதை யோசித்தாலே மிகவும் கிரேசியாக இருக்கிறது. இப்படித்தான் ஆர்ச்சரை வலையில் இந்த பையன் அடித்ததை பார்த்து ஜோஸ் பட்லர் அதைப்பற்றி பேசுவதை கேட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts