நான் சரியா ஆடல.. எனக்கு மன அழுத்தம் வந்துருச்சு.. இத செய்ய போறேன் – கருண் நாயர் பேச்சு

0
28
Karun

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் வாய்ப்பு பெற்ற கருண் நாயர் தான் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

கருண் நாயர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் திரும்பினார். அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், அவர் ஆட்டம் இழந்த விதம் அனைவரையும் கவலை அடையச் செய்தது. மீண்டும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

- Advertisement -

கருண் நாயர் பின்னடைவு காரணம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நல்ல துவக்கம் கிடைத்த பொழுதும் கூட கருண் நாயர் யாரும் எதிர்பாராத நேரங்களில் ஆட்டம் இழந்தார். காரணம் அவர் முன் காலில் விளையாடும் முறையில் சில பிரச்சனைகள் தொழில்நுட்ப ரீதியாக இருப்பதுதான். இதன் காரணமாக எப்பொழுது வேண்டுமானாலும் அவர் ஆட்டம் இழக்க கூடியவராக இருந்தார்.

மேலும் ஓவலில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் அரை சதத்தை அடித்திருந்தார். மேலும் அதை சதமாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு அவருக்கு இருந்தது. இருந்த போதும் மீண்டும் அவர் மலிவான முறையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் காரணமாக அடுத்து உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாகி இருக்கிறது.

- Advertisement -

மன அழுத்தம் இருந்தது

இதுகுறித்து கருண் நாயர் பேசும் பொழுது “கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் அரை சதத்தை சதமாக மாற்ற முடியாமல் போனதில் நான் ஏமாற்றம் அடைந்தேன். அந்த குறிப்பிட்ட நாளில் அணி சிக்கலில் இருந்த பொழுது நான் என்னுடைய பாதையை மாற்றி சரி செய்ய வேண்டியது முக்கியமானதாக இருந்தது. இதே மைதானத்தில் கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி 150 ரன்கள் எடுத்திருந்தேன். ஆனால் எனக்கு மன அழுத்தம் இருந்தது. இதிலிருந்து வெளியில் வந்து விடுவேன் என்று நினைத்தேன் ஆனால் நடக்கவில்லை”

இதையும் படிங்க : 2027 WCக்கு முன்பே விராட் ரோஹித் ஓய்வு.. இது நடந்தால் மட்டுமே தொடர்ந்து ஆடுவார்கள்.. அகர்கர் விடுவாரா?

“இந்த வகையில் இது ஒரு ஏற்ற இறக்க தொடராகவே எனக்கு அமைந்துவிட்டது. இருந்த போதும் நடந்ததை விட்டுவிட்டு, அடுத்த சில மாதங்களில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்நோக்குவதும், எனது கவனத்தை அதிகரிப்பதும், நான் எந்த நிலை கிரிக்கெட் விளையாடுகிறேன் என்பதை பற்றி கவலைப்படாமல் பெரிய ஸ்கோர் எப்படி எடுக்கிறேன் என்பதை பற்றி தான் பார்க்க வேண்டும். அந்த வழியில் செல்ல போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -