சாம்சனுக்கு நடந்த அதை பார்த்து இஷான் கொஞ்சம் கூட பயப்படலை.. அதனால தான் அவ்வளவு விலை கிடைக்குது – அஸ்வின் பாராட்டு

0
24
Ashwin

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் கோல்டன் டக் அவுட் ஆன பிறகு இஷான் கிஷான் விளையாடிய விதத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி பேசி இருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த மூன்று டி20 போட்டிகளிலும் சஞ்சு சாம்சங் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. அதேசமயத்தில் இஷான் கிஷான் பேட்டிங் எதிர்பார்க்காத அளவுக்கு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. இது இந்திய அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.

- Advertisement -

ஒரே ஓவரில் முடித்து விட்டார்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “சஞ்சு சாம்சனுக்கு வந்தது ஒரு நல்ல பந்து. அப்படி ஒரு பந்து நேராக விழுந்து ஸ்டெம்பை தாக்கும் பொழுது வெளியில் இருந்தோ அல்லது டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தோ பார்த்தால் ‘பந்து சீம் ஆக கூடும் எனவே நாம் ஹென்றி பந்தை கொஞ்சம் பொறுமையாக விளையாடலாம்’ என்று நினைப்போம்”

“ஆனால் இஷான் கிஷான் உள்ளே வந்ததும் மொத்த எண்ணத்தையும் ஏமாற்றிவிட்டார். அந்த ஒரே ஓவரில் போட்டியை முடித்தது போல செய்துவிட்டார். அந்த ஒரு ஓவரில் 16 ரன்கள் வந்தது. அவர் அடித்த அந்த முதல் ஷாட்டை பார்த்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். என்ன மாதிரியான ஒரு ஷாட்! அவர் விளையாடிய முதல் பந்து அது. மேலும் அது ஸ்லாட்டில் கூட இல்லை. அப்படி விளையாட வேண்டும் என்றால் தன்னம்பிக்கையும் திறமையும் வேண்டும்”

- Advertisement -

இதனால்தான் விலை கிடைக்கிறது

“இஷான் கிஷானுக்கு அந்த திறமை இருக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் அவர் பெரிய விலைக்குப் போகிறார். ஆனால் இப்போது அவரிடம் இருக்கும் நான் பின் வாங்க மாட்டேன் என்கின்ற துணிச்சல் மற்றும் மனநிலை இரண்டும் புதியதாக இருக்கிறது”

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனுக்கு இந்த ரெண்டு பிரச்சனை இருக்கு.. சரி செஞ்சா தான் ரன் வரும் – கோச் WV ராமன் பேட்டி

“வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ரவி பிஸ்னாய் நேற்று விளையாடினார். அவர் விளையாட வைக்கப்பட்ட விதத்தில் நல்ல தெளிவு தெரிந்தது. அதில் ஒரு மாற்றமும் தெரிந்தது. அவர் சிறப்பான லைன் மற்றும் லென்த்தில் வீசி சிறப்பாக செயல்பட்டார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -