இந்திய முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளருமான WV. ராமன் சஞ்சு சாம்சனுக்கு என்ன மாதிரியான பேட்டிங் பிரச்சனை இருக்கிறது என்பது குறித்து மிக விரிவாக பேசியிருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக விளையாடும் சஞ்சு சாம்சன் ஆட்டம் இழக்கும் முறை மிகவும் சுமாராக இருப்பது கவலை தரக்கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது. எனவே இஷான் கிஷானை துவக்க வீரராக கொண்டுவர வேண்டும் என்கின்ற பேச்சுவார்த்தை அதிகரித்திருக்கிறது.
இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட பிரச்சனை
கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்டாடி 20 தொடரில் இந்தியாவில் விளையாடியது. இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் ஷார்ட்-பால் விளையாட முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். அதில் அவருக்கு தெளிவான பிரச்சனை இருப்பது வெளியில் வந்தது.
இதைத்தொடர்ந்து ஆசியக் கோப்பை தொடர் ஆரம்பிக்கும் பொழுது சுப்மன் கில் துவக்க வீரராக கொண்டுவரப்பட்டார். பிறகு அவரும் சரிவர அந்த இடத்தில் விளையாடாததால் நீக்கப்பட்டு மீண்டும் சஞ்சு சாம்சன் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் அவருடைய பேட்டிங் முன்பை விட மிகவும் சுமாராக இருக்கிறது.
இதுதான் அவருடைய பிரச்சனை
இதுகுறித்து WV.ராமன் கூறும்பொழுது “சஞ்சுவுக்கு பேட்டிங் தொழில்நுட்ப ரீதியாகவும் மனரீதியாகவும் பிரச்சனை இருக்கிறது. அவர் பேட் கீழ்நோக்கி வரும் வேகம், பந்து எந்த வேகத்தில் வந்தாலும் ஒரே மாதிரியே இருக்கிறது. இது 130 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வரும் பொழுது அவருக்கு உதவியாக இருக்கும்”
இதையும் படிங்க : பாகிஸ்தான் டி20 உலக கோப்பைக்கு வராதீங்க.. நாங்க கொழும்பில் சிக்ஸர் அடித்தால் சென்னையில் விழும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“அதேசமயத்தில் 130 கிலோமீட்டர் வேகத்திற்கு குறைவாகவோ இல்லை அதிகமாகவோ பந்து வந்தால் அவரது பேட் கீழே இறங்கும் வேகம் ஒரே அளவில் இல்லாமல் மாற வேண்டும். அப்படி மாறாத பொழுது அவருக்கு பிரச்சனை வரும். அடுத்து மிக முக்கியமாக அவருடைய விக்கெட் கீப்பிங் ஓபனிங் இடத்திற்கு போட்டி இருக்கிறது. அது அவருக்கு நன்றாக தெரியும். எனவே அது அவருக்கு அழுத்தத்தை உண்டாக்குகிறது” என்று கூறி இருக்கிறார்.






