நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி வாகை சூடியது.
இந்த சூழ்நிலையில் குஜராத் அணி தங்கள் அணியை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. இந்த அணியில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்கியது. விராட் கோலியை தவிர சில விக்கெட்டுகள் விரைவாக வெளியேறினாலும் விராட் கோலி கடைசி வரை தன் அணியை காப்பாற்றினார்.
45 பந்துகளில் 72 ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்து இரண்டாவது முறையாக பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் இது குறித்து பேட்டியளித்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த காலத்தில் சிஎஸ்கே எப்படி நிலைத்தன்மை கொண்ட அணியாக இருந்ததோ அதேபோல தற்போது குஜராத் அணி இருக்கிறது என்றும் சில ஓட்டைகளை சரி செய்தால் அவர்கள் நிலையான அணியாக மாறிவிடுவார்கள் என்றும் அஸ்வின் பேசியிருக்கிறார்.
இது குறித்து அஸ்வின் பேசும்போது “குஜராத் அணி தற்போது தங்கள் அணியை இணைத்து பெருமைப்படலாம். தங்கள் அணியில் சில ஓட்டைகள் இருந்தாலும் அதற்கு தகுந்தவாறு அவர்கள் தங்களை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் தங்களது பலத்தை வெளிப்படுத்தி பலவீனத்தை பாதுகாத்துக் கொண்டனர். எனவே அடுத்த ஏலத்தில் அவர்கள் தங்கள் மிடில் ஆர்டரை பலப்படுத்தி பினிஷர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
அந்த ஓட்டைகளை உண்மையாகவே சரி செய்ய முடிந்தால் ஜிடி ஒரு நிலையான அணியாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அவர்கள் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனதிலிருந்தே நிலையான அணியாக இருந்து வருகிறார்கள் கடந்த காலத்தில் எப்படி சிஎஸ்கே இருந்ததோ அதேபோல குஜராத் அணி தற்போது இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.