19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள சிறப்பாக உள்ளது என்று தான் கூற வேண்டும்.
இந்த சூழ்நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்பராஸ் காரன் விளையாடுவது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் துரிதமாக செயல்பட்டு பல நல்ல இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்தது. அதில் பிரசாந்த் வீர் கார்த்திக் ஷர்மா ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டாலும் ஏற்கனவே இந்திய அணிக்காக விளையாடிய சர்பராஸ் கானை 75 லட்சம் ரூபாய்க்கு தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது.
இந்த சூழ்நிலையில் சப்ராஸ்கான் இந்திய உள்நாட்டுத் தொடரான சையது முஸ்தாக் அலி டிராபியில் 157 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்பராஸ் கான் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “100*(47), 52(40), 64(25), 73(22) சையது முஸ்தாக் அலி தொடரில் சர்பராஸ் கான் குவித்த ரன்கள் இவை. அதே பார்ம் தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் வெளிப்படுத்தி வருகிறது. அதில் ஒரு போட்டியில் 14 சிக்ஸர்களுடன் 75 பந்துகளை 157 ரன்களை விளாசினார். இதில் மிடில் ஓவர்களில் அவர் தனது ஸ்வப் மற்றும் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்களை எப்படி விளையாடுகிறார் என்பதை பார்ப்பதற்கு சுவாரசியமாக உள்ளது.
இதையும் படிங்க:2025ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவன்.. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்த அணியில் 3 இந்தியருக்கு இடம்
அவர் தனது வாய்ப்புகளுக்கான கதவை தட்டவில்லை இடித்து உடைத்துக் கொண்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். சிஎஸ்கே தனது பிளேயிங் லெவனுக்குள் தள்ளுவதன் மூலம் அவர் இந்திய அணியில் நுழைவதை பார்க்க வேண்டும். இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேக்கிங் இல் ஒரு இனிமையான பெரிய தலைவலி உள்ளது. எனவே அதனை காண்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.






