2025ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் லெவன் அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதில், ஷுப்மன் கில், கே.எல். ராகுல், ஜஸ்பிரித் பும்ரா என மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்த அணியின் 12வது வீரராக தேர்ந்து எடுக்கப்பட்டார். பும்ராவை விட சிறப்பாக செயல்பட்டு, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ்க்கு அணியில் இடமில்லை.
இந்த ஆண்டு, கில் 16 இன்னிங்ஸ்களில் 983 ரன்களையும், ராகுல் 19 இன்னிங்ஸ்களில் 813 ரன்களையும் சேர்த்தனர். பும்ரா 14 இன்னிங்ஸ்களில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜூன்-ஜூலை டெஸ்ட் தொடருக்கு முன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கை திருப்புமுனையை சந்தித்தது. ரோஹித் ஓய்வுடன், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு கில்லிடம் ஒப்படைக்கப்பட்டது.
பேட்டிங்கில் இளவரசர்:
அவர் இங்கிலாந்தில் அணியை வழிநடத்தி, 2-2 சமநிலையை ஏற்படுத்தினார்.கேப்டன்சியுடன், கில்லின் பேட்டிங் அபாரமாக இருந்தது. ‘இந்திய கிரிக்கெட்டின் இளவரசர்’, விராட் கோலியின் வாரிசு என்பதை நிரூபித்தார். அந்தத் தொடரில், ஐந்து போட்டிகளில் 75.40 சராசரியில் 754 ரன்கள் குவித்து, நான்கு சதங்கள், 269 ரன்கள் அதிகபட்சம் எனப் பதிவு செய்தார்.
தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா சிறந்த லெவன் அணிக்கு கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் இந்தியாவுக்கு எதிராக 2-0 தொடர் வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
பவுமா 15 போட்டிகளில் (17 இன்னிங்ஸ்) 44.62 சராசரியில் 714 ரன்கள், ஒரு சதம், ஆறு அரைசதங்களைப் பதிவு செய்தார்.
சிறந்த டெஸ்ட் அணி:
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் 2025 சிறந்த டெஸ்ட் லெவன்: கே.எல். ராகுல் (இந்தியா), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஷுப்மன் கில் (இந்தியா), டெம்பா பவுமா (தென்னாப்பிரிக்கா) – கேப்டன், அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா) – விக்கெட் கீப்பர், பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
இதையும் படிங்க: 2026 டி20 உலககோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.. 2 ஆர்சிபி வீரர்களுக்கு இடம்
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), ஸ்காட் போலண்ட் (ஆஸ்திரேலியா), சைமன் ஹார்மர் (தென்னாப்பிரிக்கா).இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 12வது வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அணித் தேர்வு, உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வீரர்களின் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.






