ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் துவங்கிய நிலையில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்த தொடரில் விளையாட போகும் இந்திய அணி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் இன்று தனது முதல் ஆட்டத்தை எதிர்கொள்ள உள்ளது. இதில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டு துறைகளிலும் வலுவாக விளங்குகிறது. கௌதம் கம்பீர் பயிற்சியாளர் பதவி ஏற்றதில் இருந்து இந்திய அணியின் பேட்டிங் நீளத்தை அதிகப்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதாவது இந்திய அணியின் பேட்டிங் எட்டாவது இடத்தில் இருக்கும் வரையில் பேட்டிங் தெரிந்த பந்து வீச்சாளர்களை பயன்படுத்துகிறார்.
இதே காம்பினேஷனை அவர் டி20 உலக கோப்பைக்கும் பயன்படுத்துவார் என்று தெரிகிறது. இதனால்தான் அக்சார் பட்டேல் ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர் வீரர்கள் தொடர்ந்து அணியில் விளையாடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் போன்ற தரமான சுற்பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில், இந்திய அணி இரண்டு வீரர்களையும் பயன்படுத்த வேண்டும் என்று அஸ்வின் சில யோசனைகள் கூறி இருக்கிறார்.
இதற்கான காரணம் குறித்து அவர் கூறும் போது “ஒரு சில நேரங்களில் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று நினைக்கிறேன். அதேபோல சஞ்சு சாம்சன் ஒரு சில போட்டிகளில் விளையாடலாம். இந்திய அணி இந்த சுழற்சி மாற்றங்களை செயல்படுத்தும் என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள் நாக் அவுட் போட்டியில் விளையாடும் போது எல்லா இடங்களும் நிரப்பப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது குல்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்தியை ஒன்றாக விளையாட வைக்க வேண்டும்.
இதையும் படிங்க:சிஎஸ்கே பிளம்பிங்கிடம் இருந்து.. பிரிவிஸை வரலாற்று விலைக்கு தூக்கிய கங்குலி.. முதல் சம்பவமே மாஸ்
எனவே அதைப் பற்றி பெரிய அளவில் விவாதம் இருக்காது என்று தோன்றுகிறது. அவர்கள் இருவரும் நிச்சயமாக விளையாட வேண்டும். பும்ரா, அர்ஸ்தீப், குல்தீப், வருண் சக்கரவர்த்தி ஹர்திக் பாண்டியா அக்சார் ஆகியோருடன் மீதம் உள்ளவற்றை செய்ய அவர்கள் உங்களது நான்கு பந்துவீச்சாளர்களாக இருந்தால் அதுவே ஒரு அணியை தோற்கடிக்க கூடிய ஒரு விஷயமாகும். இதனால் எட்டாவது இடத்தில் உங்களுக்கு பேட்டிங் காப்பீடு தேவையில்லை என்று அஸ்வின் பேசி இருக்கிறார்.






