இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும் இந்திய அணியில் சில முன்னணி வீரர்கள் மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருவதை தொடர்ந்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
மோசமான ஃபார்மில் இரண்டு வீரர்கள்
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரை இழந்திருக்கிறது. இந்த தொடரில் குறிப்பாக அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் ஆகிய வீரர்கள் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தனர். ஆனால் இந்த அணியில் முன்னணி வீரர்களாக கருதப்படும் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி சிறப்பாக செயல்படவில்லை.
5 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் 6க்கும் குறைவான சராசரியில் 22 ரன்களை தாண்டவில்லை. மேலும் மற்றொரு ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சன் முந்தைய தொடரில் மூன்று சதங்கள் அடித்த நிலையில் இந்தத் தொடரில் மொத்தமாகவே அவர் 51 ரன்கள் மட்டுமே அடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஒரே பந்து, அதே ஃபீல்டிங் செட் அப், அதே ஷாட், அதே தவறு செய்து அவுட் ஆனார்கள். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் இது போன்ற தவறுகள் நடந்தால் பரவாயில்லை. ஆனால் இது இனி விசித்திரமாக இருக்க முடியாது. பேட்ஸ்மேன்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும் ஆனால் எங்களது பேட்ஸ்மேன்கள் அதே கேள்விக்கு சிறந்த பதிலை கொண்டிருக்க வேண்டியது அவசியம். இந்தத் தொடரில் சூரியகுமார் யாதவின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது.
இதையும் படிங்க:கோப்பையை வென்ற போது.. கோலி செய்த செயல் மறக்கவே முடியாது.. அவங்களை மிஸ் செய்கிறேன் – தவான் உணர்ச்சி பேட்டி
அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் அவர் தனது பேட்டிங்குக்கு தேவையான ஓய்வை அளிக்க முடியும். சூர்யா மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர். அவர் தனது பேட்டிங்கில் அணுகுமுறையை மாற்ற வேண்டிய நேரம் இது” என்று கூறி இருக்கிறார். சஞ்சு சாம்சன் ஐந்தாவது டி20 போட்டியில் காயம் அடைந்து வெளியேறி இருக்கிறார். இதனால் அவர் எட்டாம் தேதி நடைபெற உள்ள ரஞ்சி டிராபி கால் இறுதிப் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறங்குவார் என்ற எதிர்பார்க்கலாம்.