ஐபிஎல்

நான் மும்பை அணியில் இருந்தால்.. ஹர்திக் பாண்டியாவை கொடுத்துட்டு சிஎஸ்கே அணியில் அந்த 2 பேரை கேட்பேன் – அஸ்வின் பேட்டி

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியோடு இந்த தொடர் நிறைவடையுள்ளது. இந்த சூழ்நிலையில் முன்னணி அணிகளாக கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த தொடரில் புள்ளி பட்டியலில் கீழ்வரிசையை பிடித்து ஏமாற்றம் அளித்திருக்கிறது. அதில் குறிப்பாக மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா கேப்டனாக மட்டுமல்லாமல் ஆல் ரவுண்டராகவும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறார்.

கடந்த மூன்று சீசன்களாக கேப்டன் பதவியை வகித்து வரும் அவரது தலைமையில் மும்பை அணி இறுதிப் போட்டியை எட்டவில்லை. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி ஹர்திக் பாண்டியா தனது கேப்டன் பதவியில் இருந்து விலக நினைக்கிறார் என்ற தகவல்கள் வெளி வருகின்றன. மேலும் அவர் மும்பை அணிக்கு விளையாடாத பட்சத்தில் வேறு எந்த அணிகள் அவரை வாங்க முயற்சிக்கும் என்று அஸ்வின் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அஸ்வின் கூறும் போது “ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே வாங்க நினைத்தால் முழு ஒப்பந்தத்தில் வாங்குவேனே தவிர அவருக்காக எந்த சிஎஸ்கே வீரரையும் விட்டுக் கொடுக்க நான் விரும்ப மாட்டேன். அதேபோல நான் மும்பை அணிக்காக வர்த்தகம் செய்தால் மாத்ரே, கலீல் அகமது மற்றும் அன்சூல் கம்போஜ் போன்ற வீரர்களை வர்த்தகம் செய்வேன். எனவே மும்பை அணி ஏதாவது ஒரு சிஎஸ்கே வீரரை நிச்சயம் வர்த்தகம் செய்யும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

இதுவே லக்னோ அணி வாங்க நினைத்தால் ஹர்திக் பாண்டியாவுக்காக முக்குள் சவுத்ரி மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோரை மாற்றலாம். மேலும் பஞ்சாப் அணி நினைத்தால் அர்ஸ்தீப் சிங்கை வர்த்தகம் செய்யலாம். அதுவே டெல்லி அணி நினைத்தால் கே எல் ராகுலை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் கொல்கத்தா அணிக்காக எனும்போது கேமரூன் கிரீனை பரிமாற்றம் செய்வதும் நல்ல தேர்வாக இருக்கும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts