நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடர் நாயகன் விருது ரச்சின் ரவீந்தராவுக்கு தரப்படாமல் இந்திய வீரர் ஒருவருக்கு தரப்பட்டு இருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் நாயகனாக இரண்டு சதங்கள் அடித்திருந்த ரச்சின் ரவீந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “யார் என்ன சொன்னாலும் செய்தாலும் தொடர் நாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் இந்த தொடர் முழுக்க விளையாடாதவர். இது எவ்வளவு பெரிய வித்தியாசம். மேலும் அவர் இல்லாமல் இருந்திருந்தால் இந்திய அணியின் போட்டிகளில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டிருக்கும். அவர் எக்ஸ்பெக்டரையும், புதுமையையும் பந்துவீச்சில் கொண்டு வந்தார். நான் நடுவராக இருந்தால் அவரையே தேர்ந்தெடுத்து இருப்பேன்”
“கிளன் பிலிப்சை அவர் எப்படி அவுட் செய்தார் என்று பாருங்கள். அவர் டெம்பிள் மறைக்காமல் விளையாடினார். இதன் காரணமாக வருண் வைடாக கிரிஸில் வந்து பந்தை வீசி போல்ட் செய்தார். என்னைப் பொறுத்த வரையில் தொடரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒருவருக்குதான் தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட வேண்டும். அதற்கு வருண் சக்கரவர்த்தி தகுதியானவர்”
இருவருக்காக மகிழ்ச்சி அடைகிறேன்
“ரோகித் மற்றும் கம்பீர் இருவருக்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கம்பீர் பற்றி யோசித்துப் பாருங்கள் பயிற்சியாளராக அவருக்கு ஆரம்பத்தில் பெரிய தோல்விகள் வந்தது. அப்படிப்பட்ட நிலையில் பும்ரா அணியில் இல்லை. இந்த நேரத்தில் நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கிறீர்கள். இந்திய அணியும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்கிறது”
இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தானில் ஆடுனாலும் ஜெயிக்கும்.. ஏன்னா பிசிசிஐ செஞ்ச அந்த ஒரு வேலைதான் – வாசிம் அக்ரம் பாராட்டு
“தற்போது இது என்ன சொல்கிறது? இந்த தொடரின் வெற்றியை பந்துவீச்சாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பும்ரா இல்லாமல் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்திய அணியை பற்றி உலகம் புரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன். இது மிகவும் சிறப்பான வெற்றி” என்று கூறியிருக்கிறார்.






