இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாமல் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டது பெரிய சர்ச்சை ஆனது. இந்த நிலையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டது மிகவும் சரி என பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்திய டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இடத்திற்கு முதலில் ருதுராஜுக்கு வாய்ப்புகள் கொடுத்தது. பிறகு சுப்மன் கில்லும் வாய்ப்புகள் பெற்று விளையாடினார். இறுதியாக இருவரும் சம அளவில் வாய்ப்பு பெற்று இருந்த நிலையில் புள்ளி விபரங்களில் கில்லை விட ருதுராஜ் முன்னணியில் இருந்தார்.
இப்படியான நிலையில் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டது மிகவும் சரி எனவும், அது குறித்து விவாதிக்கலாம் ஆனால் அதற்கு மேல் செல்லக்கூடாது எனவும், அது ஆணி வேரையே அசத்துப் பார்ப்பது போல் எனவும் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருப்பது தற்பொழுது பரபரப்பாக சமூக வலைதளங்களில் மாறி இருக்கிறது.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது மற்றும் கில் தேர்வு செய்யப்பட்டது குறித்து ஸ்ரீகாந்த் மற்றும் பத்ரிநாத் தங்களுடைய யூடியூப் சேனலில் ஏகபோகமாக பேசி இருக்கிறார்கள். ஒரு வீரர் 7.5 மதிப்பெண் எடுத்திருக்கிறார் என்று நமக்கு தோன்றினால் இன்னொருவருக்கு 8 மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறார் என்று தோன்றும். இப்படித்தான் கில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
தேர்வுக்குழுவில் இருக்கும் சிறந்த கிரிக்கெட் மூளை கொண்டவர்கள், பயிற்சியாளர் எல்லாம் ஒரு வீரரை ஆதரித்து அணியில் சேர்க்கிறார்கள் என்றால் அந்த வீரர் திறமை இல்லாமல் இருக்க மாட்டார். மேலும் சில வீரர்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு என இந்திய கிரிக்கெட் வாரியம் யோசிக்கும். அவர்களைத் தேர்ந்தெடுத்து வாய்ப்புகள் கொடுத்து வைத்துக் கொள்ளும்.
இப்படி யோசித்து தேர்வு செய்யக்கூடிய வீரர்களை தேர்வு செய்யக்கூடாது என்பது ஆணிவேரையே அசைத்துப் பார்ப்பது போல் ஆனது. மேலும் இதேபோல் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை வாய்ப்புகள் கொடுத்து இந்திய அணியில் வைத்த பொழுது, இவர்களை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? இவர்களுக்கு பதில் இவர்களைத் தேர்ந்தெடுத்து இருக்கலாமே என்று நிறைய விமர்சனங்கள் வந்தது. ஆனால் 15 ஆண்டுகள் கழித்து திரும்பி பார்க்கும் பொழுது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சிறப்பாக விளையாடிய நிறைய நல்ல முடிவுகளை இந்திய கிரிக்கெட்டுக்கு தந்து இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : ரொம்ப அலட்சியமா இந்த விஷயத்தில் இந்திய பவுலர்கள் இருந்தாங்க.. வினோதமா ஒன்னு செய்றாங்க – ஆகாஷ் சோப்ரா அலசல்
தற்பொழுது அணி தேர்வு குறித்து விவாதிப்பது என்பது ஜாலியான ஒன்றாக இருக்கிறது. எனவே அதை எடுத்து வைத்து ஜாலியாக விவாதிப்பது பிரச்சனை கிடையாது. ஆனால் அதை உள்ளே விவாதித்து வேறு மாதிரி பேசுவது கூடாது” என்று கூறியிருக்கிறார்.