இந்திய கிரிக்கெட்

ODIல எங்க தோனி டீம் ஆதிக்கத்த முடிக்க.. ஐசிசி போட்ட பிளான்தான் அந்த ரூல் – அஸ்வின் பேட்டி

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருநாள் கிரிக்கெட் மீண்டும் ரசிகர்களுக்கு பரபரப்பாக அமைய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், தற்போது இருக்கும் புதிய விதி எதன் காரணமாக கொண்டுவரப்பட்டது? என்பது குறித்தும் அதிரடியாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது டி20 கிரிக்கெட் வருகைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களிடையே ஆர்வம் குறைவாகி இருக்கிறது. ஆனால் இதற்கு மிக முக்கிய காரணம் டி20 கிரிக்கெட் கிடையாது ஒருநாள் கிரிக்கெட்டுக்கு கொண்டுவரப்பட்ட புதிய விதிகள்தான் என ரவிச்சந்திரன் அஸ்வின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் பழைய புதிய விதிகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் முன்பு ஒரே பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 35 ஓவர்கள் தாண்டி பந்து தேய்ந்த பிறகு ரிவர்ஸ் ஸ்விங் கிடைத்தது. இதனால் கடைசி கட்டத்தில் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி கொடுப்பது தடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது இரண்டு பக்கத்திலும் பந்து வீச இரண்டு புதிய பந்துகள் கொடுக்கப்படுகிறது. ஒரு பந்து இருபத்தைந்து ஓவர் மட்டுமே பயன்படுகிறது. இதனால் பந்து தேய்ந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவது தடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் 11 முதல் 40 ஓவர்கள் வரையில் வெளியில் பவுண்டரி எல்லையில் ஐந்து பீல்டர்களை முன்பு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் தற்போது இது 4 பீல்டர்கள் என்று குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் சுலபமாக பவுண்டரிகள் அடிக்க முடிகிறது. இதன் காரணமாக பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பயன்பாடு குறைந்துவிட்டது.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் குற்றச்சாட்டு

இதுகுறித்து அஸ்வின் கூறும் பொழுது ” அடுத்து 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரட்டும் பெரிய வரவேற்பு இருக்குமா? என்று எனக்கு தெரியவில்லை. காரணம் புதிய விதிகளால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்த சுவாரசியம் குறைந்துவிட்டது. தூங்கி எழுந்து வந்து பார்த்தால் கூட என்ன நடந்தது என்று தெரிகிறது. மெகா சீரியலை வாரத்திற்கு ஒரு நாள் பார்த்தாலும் புரியும் என்பது போல ஆகிவிட்டது. எனவே மீண்டும் பழைய விதிமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும்”

இதையும் படிங்க : இந்திய அணிக்கு ஆஸியை பார்த்து பயம்.. ஒரே கிரவுண்ட்ல ஆடி ஜெயிக்கிறாங்க – கில்லஸ்பி விமர்சனம்

“நாங்கள் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றை வென்றோம். அந்த நேரத்தில் நாங்கள் எங்களுடைய சுழல் பந்து வீச்சை வைத்து ஆதிக்கம் செலுத்தினோம். இந்த நேரத்தில்தான் திடீரென புதிய விதிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் கொண்டுவரப்பட்டது. இது ஒருநாள் கிரிக்கெட்டில் எங்களுடைய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர ஐசிசி செய்த திட்டம் போலவே எனக்கு தோன்றியது. இது குறித்து நான் அப்போதே பேசி இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts