ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ளாமல் அடுத்து மினி ஏலத்தில் கலந்து கொண்டு மூன்று வருடத்தில் சம்பாதிக்க வேண்டியதை இரண்டு அல்லது ஒரே வருடத்தில் சம்பாதிப்பதை சில வெளிநாட்டு வீரர்கள் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் இதை தடுப்பதற்கான புதிய விதி வரப்போவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ளாமல் அடுத்து மினி ஏலத்தில் கலந்து கொண்டு மூன்று வருடத்தில் சம்பாதிக்க வேண்டியதை இரண்டு அல்லது ஒரே வருடத்தில் சம்பாதிப்பதை சில வெளிநாட்டு வீரர்கள் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் இதை தடுப்பதற்கான புதிய விதி வரப்போவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
பொதுவாக ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணி நிர்வாகங்களும் புதிய அணியை உருவாக்குவதற்கு தங்களிடம் இருக்கும் மொத்த பணத்தை பிரித்து சரிசமமாகச் செலவு செய்வார்கள். இதன் காரணமாக வெளிநாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள் 10 கோடியை தொடுவதே பெரிய விஷயம்.
அதே சமயத்தில் மெகா ஏலத்தில் அணி உருவாக்கத்தில் இருக்கும் குறைபாடுகள் அந்த வருடத்தில்தான் தெரிய வரும். இதைத் தொடர்ந்து தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நீக்கிவிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை எல்லாம் அணி நிர்வாகமும் கையில் வைத்திருக்கும்.
இப்படியான நிலையில் ஒவ்வொரு அணிக்கும் ஒன்று, இரண்டு சரியான வீரர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள். ஆனால் அவர்களிடம் நிறைய பணம் இருக்கும். எனவே மெகா ஏலத்தில் கலந்து கொள்ளாமல் மினி ஏலத்தில் மட்டுமே கலந்து கொள்ளும் வெளிநாட்டு வீரர்களுக்கு இந்த நேரத்தில் அதிக விலை கிடைக்கும். இதைக் குறி வைத்து சில பல வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தில் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். இதை தடுக்க அடுத்த வருடம் புதிய விதி வர இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இனி மெகா ஏலத்தின்போது நான் மீன் பிடிக்கப் போகிறேன் பண்ணைக்கு போகிறேன் என போக முடியாது. எல்லோருமே மெகா ஏலத்தில் கலந்து கொண்டுதான் ஆகவேண்டும். மினி எழுத்தில் மட்டுமே கலந்து கொண்டு அதிக பணம் சம்பாதிக்க இனி முடியாது.
இதையும் படிங்க : 6,6,6,6,6.. ரஷித் கான் ஒரே ஓவரில் பொல்லார்டு ருத்ர தாண்டவம்.. இங்கிலாந்து 100 பந்து தொடரில் அதிரடி
மினி ஏலத்தில் வந்து அதிக பணம் சம்பாதித்து தனித்தீவு வாங்கும் வேலையெல்லாம் நடக்காது. மினி ஏலத்தில் வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு, குறிப்பிட்ட ஐபிஎல் காலகட்டத்தில் இந்திய வீரர் ஒருவர் வாங்கும் அதிகபட்ச சம்பளத்தைதான் வாங்க முடியும். இனி இந்திய வீரர்களை தாண்டி பெரிய விலை மினி ஏலத்தில் வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு கிடைக்காது” என்று கூறியிருக்கிறார்.






