தற்போது இங்கிலாந்தில் 100 பந்துகள் போட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் பிரேவ் சதர்ன் அணிக்காக விளையாடிய கீரன் பொல்லார்டு டி
ரெண்ட்ஸ் ராக்கெட்ஸ் அணியின் ரஷித் கான் ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் அடித்து அமர்க்களப் படுத்தியிருக்கிறார்.
இந்த தொடரில் ஒரு அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மொத்தம் 100 பந்துகள் கொடுக்கப்படும். பந்துவீச்சை பொறுத்தவரை ஒரு ஓவர் என்பது ஐந்து பந்துகள். ஒரு பந்துவீச்சாளர் தொடர்ந்து இரண்டு ஓவர்களை கூட வீசலாம். அதாவது தொடர்ந்து பத்து பந்துகள் கூட வீசலாம்.
இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற டிரெண்ட்ஸ் ராக்கெட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு டாம் பான்டன் 17 பந்தில் 30 ரன்கள், அலெக்ஸ் ஹேலஸ் 13 பந்தில் 15 ரன்கள், ஜோ ரூட் 12 பந்தில் 16 ரன்கள், ரோமன் பவல் 14 பந்தில் 16 ரன்கள், கேப்டன் ஜார்ஜ் கிரேகோரி 17 பந்தில் 19 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 100 பந்துகளில் எட்டு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. பிரேவ் சதர்ன் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 20 பந்துகள் வீசி 22 ரன்கள் தந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பிரேம் சதர்ன் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் டேவிட் 19 பந்தில் 28 ரன்கள், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 26 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல துவக்கம் கொடுத்தார்கள். அடுத்த மூன்று பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதற்கு அடுத்து பேட்டிங்கில் ஆறாவது இடத்தில் வந்த கீரன் பொல்லார்டு ஒரு முனையில் நின்று பொறுப்பாக விளையாடி அணியை கடைசி வரை எடுத்து வந்தார். இந்த நிலையில் 80 பந்துகள் முடிவடைந்திருந்த போது, தன்னுடைய முதல் 15 பந்தில் 10 ரன்கள் மட்டும் கொடுத்து இருந்த ரஷீத் கான் தன்னுடைய கடைசி 5 பந்துகளை வீச வந்தார்.
அதுவரையில் பொறுமையாக இருந்த கீரன் பொல்லார்டு ரஷீத் கான் வீசிய ஐந்து பந்துகளையும் அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடித்து நொறுக்கி தள்ளிவிட்டார். ரஷித் கான் பரிதாபமாக கடைசி தன் ஓவரில் 30 ரன்கள் கொடுத்து வெளியேறினார்.
இதையும் படிங்க : கோலிய சப்போர்ட் பண்ணி பேச வரல.. ஆனா இலங்கையில் உண்மையில் நடந்தது இதுதான் – தினேஷ் கார்த்திக் பேட்டி
பிரேவ் சதர்ன் அணிக்கு கடைசி 20 பந்தில் 49 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரசித் கான் வீசிய 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து 30 ரன்கள் எடுத்து, கடைசி பத்து பந்துகளுக்கு 19 ரன்கள் தேவை என்கின்ற நிலைக்கு கீரன் பொல்லார்டு ஆட்டத்தை நகர்த்தி விட்டார். இறுதியாக பிரேவ் சதர்ன் அணி 99 பந்துகளில் 8 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கீரன் பல்லாண்டு ஆட்டநாயகன் விருது பெற்றார்.
POLLARD SMASHED 5 CONSECUTIVE SIXES AGAINST RASHID KHAN. 🥶 👌 pic.twitter.com/f4HJvsEsjW
— Johns. (@CricCrazyJohns) August 10, 2024






