113 ஓவர் 8 விக்கெட்.. கடைசியில் வெஸ்ட் இண்டிஸ் கம்பேக்..தென்னாப்பிரிக்கா அசத்தல் பேட்டிங்.. முதலாவது டெஸ்ட்

0
455

தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த புதன்கிழமை ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் கெமார்க் ரோச் காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் மார்க்ரம் மற்றும் டோனி டி சார்சி ஆகியோர் இன்னிங்சை தொடங்கினார்கள். மார்க்ரம் 9 ரன்கள் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு டோனியுடன் மூன்றாவது வரிசையில் ஸ்டெப்ஸ் களம் இறங்கினார். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 85 பந்துகளில் 43 ரன்கள் குவித்தனர். இதில் 48 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்களில் ஸ்டெப்ஸ் ஆட்டம் இழந்தார்.

அதற்குப் பிறகு டோனியுடன் கேப்டன் பவுமா ஜோடி சேர, இருவரும் தென்னாப்பிரிக்க அணியை ஓரளவு மீட்டெடுத்தனர். 145 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 78 ரன்கள் குவித்த டோனி, வாரிக்கன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு கேப்டன் பவுமா சிறப்பாக விளையாடி 182 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 82 ரன்கள் குவித்து வெளியேறினார்.

ஐந்து விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க அணி, அதற்குப் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழக்க ஆரம்பித்தது. பெடிங்காம் 29 ரன்களும், ரிக்கல்ட்டன் 19 ரன்கள், விக்கெட் கீப்பர் வெரின் 39 ரன்களும் மல்டர் 37 ரன்களுடன் ரபாடா உடன் ஜோடி சேர்ந்து விளையாடி வரும் நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

இதுவரை தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 113 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது. 328 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் என்ற நிலை இருந்தபோது வாரிக்கன் தொடர்ந்து இரண்டு விக்கெட் வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் திரும்பவும் கம்பேக் கொடுக்க வழி வகுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியை பொருத்தவரை காயத்தில் இருந்து மீண்டு வந்த கெமார் ரோச் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் வாரிகன் 3 விக்கெட்டுகளும் சீல்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்கள். ஜேசன் ஹோல்டர் 1 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க:அவங்க சொல்றதே எதுவும் புரியலன்னா.. அப்புறம் எப்படி நல்லா விளையாட முடியும் – பாக் வீரர் நஷீம் ஷா பேட்டி

இன்னும் மூன்று நாட்களில் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்க அணி நல்ல ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் பலமான பேட்டிங் வரிசை இருப்பதால் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கும் இந்த போட்டி மிகவும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.