“இது உறுதிங்க.. இந்திய கிரிக்கெட்ல அடுத்த சூப்பர் ஸ்டார் இந்த பையன்தான்” – அஸ்வின் நம்பிக்கை

0
93
Ashwin

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், துருவ் ஜுரல், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இளம் வீரர்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு தொடராக அமைந்தது. இவர்களுக்கு இந்த தொடர் இவர்களுடைய கிரிக்கெட் காலத்தில் எப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கும்.

மிகக்குறிப்பாக ஜெய்ஸ்வால் இந்த தொடரில் இரண்டு இரட்டை சதங்களுடன் 712 ரன்கள் குவித்து இருக்கிறார். கவாசகருக்கு அடுத்து 700 ரன்கள் ஒரு டெஸ்ட் தொடரில் குவித்த இந்திய பேட்ஸ்மேன் ஆக சாதனை படைத்திருந்தார். மேலும் சுப்மன் கில்லுக்கு தனிப்பட்ட முறையில் மிக சோதனையான தொடராக ஆரம்பித்து, இறுதியில் மிக மகிழ்ச்சியான தொடராக முடிவுக்கு வந்தது.

- Advertisement -

மீதமுள்ள வீரர்கள் இளம் வீரர்கள் எல்லோருக்கும் அறிமுக டெஸ்ட் தொடராக அமைந்தது. அவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி, இந்திய டெஸ்ட் அணியில் இதற்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெறுவதற்கான சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும் இவர்களின் செயல்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்று தெரிந்தது.

சீனியர் வீரர்களை எடுத்துக் கொண்டால் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு இளம் வீரர்களை வழிநடத்தி தொடரை வென்றே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. இதில் ரோகித் சர்மா மிகச் சிறப்பாக செயல்பட்டு கேப்டனாக மட்டும் இல்லாமல் பேட்ஸ்மேன் ஆகவும் வெற்றியடைந்திருக்கிறார். களத்தில் திட்டங்களைக் கொண்டு வந்ததில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்கும் சிறப்பான தொடர். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நூறாவது டெஸ்ட் போட்டி, மேலும் 500 வது டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட் என மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

இந்த தொடரில் இளம் வீரர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பது குறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “துருவ் ஜுரல் தன்னுடைய அறிமுக டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் மிகவும் கம்போசராக இருந்தார். சூழ்நிலையைப் புரிந்து மிகவும் இயல்பாக பதட்டமில்லாமல் விளையாடினார். பென் டக்கெட்டை அவர் ரன் அவுட் செய்த விதத்தில், அவருடைய ஆட்ட விழிப்புணர்வை பார்க்க முடிந்தது. பாதி விக்கெட் கீப்பர்கள் அந்த இடத்திற்கு ஓடி வந்தே இருக்க மாட்டார்கள். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

- Advertisement -

ஜெய்ஸ்வாலை எடுத்துக் கொண்டால் 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஹர்பஜன் சிங்குக்கு அமைந்தது போல் சிறப்பாக அமைந்திருக்கிறது. அவர் இருக்கும் விதத்தைப் பார்த்தால் எந்த பந்தை வேண்டுமானாலும் அவர் சும்மா அடித்தால் போதும் என்பது போல் இருக்கிறது. இவருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

இதையும் படிங்க : 42 ஓவர் 6 விக்கெட்.. நஜிபுல்-ரஹீம் மெகா பார்ட்னர்ஷிப்.. இலங்கைக்கு பங்களாதேஷ் அணி பதிலடி தந்தது

ஆனால் நான் எல்லோரையும் விட சுப்மன் கில்லை கொஞ்சம் முன்னே வைப்பேன். ஏனென்றால் அவருக்கு இந்த தொடரில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தது. அவர் அதைத் தாண்டி வந்து சிறப்பாக விளையாடினார். இந்தத் தொடரில் அவர் அணியில் இருக்கலாமா? என்பதில் ஆரம்பித்து அவருடைய பேட்டிங் டெக்னிக் வரை விமர்சிக்கப்பட்டது. ஆனால் அது எல்லாவற்றையும் தாண்டி சோதனையில் ஆரம்பித்து இறுதியில் மிகச் சிறப்பாக முடித்து இருக்கிறார். சந்தேகத்துக்கு இடமில்லாமல் கில் ஒரு சூப்பர் ஸ்டார் பிளேயர். எனக்கு மிகவும் பிடித்த பிளேயர்” எனக் கூறியிருக்கிறார்.