இந்திய கிரிக்கெட் வாரியத்தால் சம்பளப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷான் மீண்டும் இந்திய அணியில் நுழைவதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். இதன் ஒரு பகுதியாக அவர் ஒரு முக்கிய முடிவு எடுத்து விளையாடுவதற்கு தமிழ்நாடு வர இருக்கிறார்.
சமீபத்திய இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்குமான விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷான் இருவரும் பார்க்கப்பட்டார்கள். இஷான் கிஷான் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கியதால் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புகள் பெற்று வந்தார்.
இப்படியான நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இருந்து மனவெறுமை காரணமாக விளங்கிக் கொண்டார். தொடர்ந்து அணியில் இடம் கிடைத்தாலும் பிளேயிங் லெவனனில் இடம் பிடிக்காமல் அணிவுடன் பயணித்து வருவதால், மனபாரம் அதிகமாக இருப்பதாக கூறி வெளியே சென்றார்.
இதன் தொடர்ச்சியாக அவர் ஓய்வில் இருந்து வெளியே வந்து உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநில அணிக்கு ரஞ்சி கிரிக்கெட் விளையாட வில்லை. இது இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிகப்படியாகக் கோபப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக அவர் சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இஷான் கிஷான் தற்பொழுது உள்நாட்டு சீசனில் ஜார்க்கண்ட் அணிக்கு விளையாட சம்மதித்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் புச்சி பாபு டெஸ்ட் தொடருக்கு ஜார்க்கண்ட் மாநில அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவர் ரஞ்சி சீசனில் ஜார்க்கண்ட் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டு தொடர் மூலமாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கான இஷான் கிஷானின் திட்டம் ஆரம்பித்திருக்கிறது. அடுத்தடுத்து இந்திய அணி 10 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப்மென்ட் இருவரும் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய விக்கெட் கீப்பர்களாக இருப்பார்கள்.
இதையும் படிங்க : வருகிறது இன்னொரு புதிய ஐபிஎல்.. தோனி இன்னும் 5 ஆண்டுகள் கூட ஆடலாம்.. பிசிசிஐ மெகா பிளான்
இந்த நிலையில் இஷான் கிஷான் இவர்கள் இருவரையும் தாண்டுவது கடினம் என்றாலும், துருவ் ஜுரல் மற்றும் கேஎஸ்.பரத் ஆகியோரை தாண்டி மூன்றாவது இந்திய விக்கெட் கீப்பராகமுன்னேற வேண்டும். அப்பொழுதுதான் கே எல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் யாராவது விளையாட முடியாமல் போகும்பொழுது இந்திய அணிக்கு மீண்டும் வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.