இந்திய கிரிக்கெட்டின் நவீன அடையாளங்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான பேட்டிங் பார்மில் விளையாடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் இந்திய முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி கூறிய வார்த்தையை நினைவுபடுத்தி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நவ்ஜோத் சிங் சித்து ஆதரவு
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஜாம்பவான்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அசைக்க முடியாத வீரர்களாக வலம் வருகிறார்கள். ஆனால் சிவப்பு பந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரது பேட்டிங்கும் சமீபத்திய இன்னிங்ஸ்களில் மிக மோசமான முறையில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் இரண்டிலும் மோசமாக விளையாடினார்கள்.
இதில் விராட் கோலி கூட முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நிலையில் அதற்கு அடுத்த நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்து வெறுப்பை உருவாக்கினார். மற்றொரு வீரரான ரோகித் சர்மா தொடர்ந்து மோசமாக விளையாடி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தானாகவே விலகினார். இந்த சூழ்நிலையில் ரசிகர்கள் மற்றும் பல முன்னாள் வீரர்களிடமிருந்து இவர்கள் இருவரும் விரைவாக ஓய்வு பெற வேண்டும் என தொடர்ந்து கருத்துக்களை கூறிவரும் நிலையில் நவ்ஜோத் சிங் சித்து இவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கற்களை எரிவது எளிதான விஷயம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” உங்களுக்குத் தெரியும் ஒருவரது மோசமான ஃபார்ம் இரண்டு மாதங்களாக உண்டாகி வருகிறது. ஆனால் இதற்கு முன்னர் அவர்கள் இந்திய அணிக்காக ஆற்றிய சேவைகள் யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். அவர்கள் மோசமான நிலையில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு தகுந்தகால அவகாசத்தை கொடுக்க வேண்டும். முன்னாள் ஜாம்பவான் மார்க் டெய்லர் ஒன்றரை வருடங்களாக மோசமான ஃபார்மில் இருந்தார்.
இதையும் படிங்க:10 ரன்.. 5 விக்கெட்.. மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி அபார வெற்றி.. சன் ரைசர்ஸ் தோல்வி.. எஸ்ஏ டி 20
அதேபோல இந்திய ஜாம்பவான் அசாருதீன் தொடர்ந்து தோல்வியடைந்தார். அவ்வளவு ஏன் கங்குலி கூட 8 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தார். ஆனால் அப்போது அவர் ஒரு வார்த்தையை கூறினார். நான் 8 இன்னிங்ஸ்களில் தொடர்ந்த தோல்வி அடைய முடியும். ஆனால் நான் மீண்டு வர எனக்கு ஒரே ஒரு இன்னிங்ஸ் போதும் என்று கூறினார். அதேபோல இவர்கள் இருவரும் மீண்டு வருவதற்கு ஒரு இன்னிங்ஸ் மட்டுமே போதுமானது என்று நினைக்கிறேன். இது ஒரு குழு விளையாட்டு கற்களை எறிவது மிக எளிதான விஷயம். ஆனால் சிலர் உலகம் எரியும் கற்களால் தங்கள் வீடுகளை உருவாக்குகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.