3-0 தோல்வி.. வீடியோ போடவே மனசு வரல.. ப்ளீஸ் இதை மட்டும் செய்யாதிங்க – அஸ்வின் உருக்கமான வேண்டுகோள்

0
44
Ashwin

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி உள்நாட்டில் கஷ்ட தொடரில் ஒயிட் வாஷ் ஆனது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயம் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி 12 ஆண்டுகளாக உள்நாட்டு தொடரின் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருந்து மிகப்பெரிய உலகச் சாதனை செய்திருந்தது. இப்படியான நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமீபத்தில் முழுவதுமாக தோற்று தனது சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இந்திய வீரர்களை வெகுவாக பாதித்திருக்கிறது.

- Advertisement -

சோபிக்க தவறிய ரவிச்சந்திரன் அஸ்வின்

நியூசிலாந்து அணிக்கு முன்பு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் டெஸ்டில் பேட்டிங்கில் சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றியதோடு பந்துவீச்சிலும் அந்த தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் எப்படியும் அவரிடமிருந்து சிறந்த செயல்பாடு வெளிவந்து விடும்.

இந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு மற்றும் பேட்டி என இரண்டு துறைகளில் எந்தவித தாக்கத்தையும் செலுத்தவில்லை. நியூசிலாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் அவர்களுக்கு எதிராக அவரால் எதையும் செய்ய முடியவில்லை. இது அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

இதை மட்டும் சந்தேகப்படாதீர்கள்

இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “எல்லோரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்கள் நினைத்தார்கள். அவர்கள் அப்படித்தான் ரியாக்ட் செய்தார்கள். நான் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் இந்த தோல்வியால் நாங்கள் அனைவருமே காயம் பட்டிருக்கிறோம். ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்களைப் போல் வேறு யாரும் காயப்பட முடியாது”

“இவர்கள் களத்தில் ஒழுங்காக செயல்படவில்லை என்றால் அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடும். எனவே கேரக்டர் அசாஸினேட் செய்யாதீர்கள். எங்கள் காயத்தை சந்தேகப்படாதீர்கள். கடைசி வீடியோவுக்குப் பிறகு வீடியோ போட மனம் வரவில்லை. வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி இந்திய அணி தோற்றதில்லை என்று எங்கோ படித்தேன். இதற்கு எப்படி பதில் அளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை”

இதையும் படிங்க : 140 ரன்.. 22 ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் வரலாற்று வெற்றி.. ஆஸி அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாதித்தது

“எங்களுடைய தொழில் வாழ்க்கையில் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் பெரிய அளவில் உணர்ச்சிகள் இருக்காது. ஆனால் இந்த தோல்வி பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதை இப்படித்தான் சொல்ல முடியும். இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது பதில் அளிப்பது என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -