140 ரன்.. 22 ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் வரலாற்று வெற்றி.. ஆஸி அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாதித்தது

0
189
Pakistan

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி விக்கெட் 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் அணி தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருந்தன.

- Advertisement -

மீண்டும் திரும்பிய பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஷார்ட் 30 பந்தில் 22 ரன், ஜாக் பிரேசர் மெக்கர்க் 9 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத் தொடர்ந்து முக்கிய வீரர்கள் ஜோஸ் இங்லீஷ் 19 பந்தில் 7 ரன்கள், மார்க்கஸ் ஸ்டோனியிஸ் 25 பந்தில் 8 ரன்கள், கிளன் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். முடிவில் ஆஸ்திரேலியா அணி 31.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா இருவரும் தலா 3 விக்கெட், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

சிறப்பான தொடக்கம் தந்த ஓபனர்ஸ்

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 17.1 ஓவரில் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக் 53 பந்தில் 37 ரன்கள், சையும் அயூப் 52 பந்தில் 42 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இதையும் படிங்க : கம்பீர் குழு பீதியில இருக்கு.. கடவுள் இடத்தில இருந்து அந்த வீரரை தவறா கணக்கு போடறாங்க – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

இதைத்தொடர்ந்து ஆட்டம் இழக்காமல் பாபர் அசாம் 30 பந்தில் 28 ரன், கேப்டன் முகமது ரிஸ்வான் 27 பந்தில் 30 ரன் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி 26.5 ஓவரில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 22 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணி ஒரு தொடரை வென்று சாதித்து இருக்கிறது.

- Advertisement -