இந்திய கிரிக்கெட்டின் இளவரசன் சுப்மன் கில் என்ற கருத்துக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் நேரடியாகவே அதெல்லாம் வியாபாரம் சம்பந்தப்பட்டது மார்க்கெட்டிங் என்று வெளிப்படையாக கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முடிந்திருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி முக்கிய காரணமாக ரவிச்சந்திரன் இருந்தார்.
குறுக்கிடும் பவுலிங் மூளை
ரவிச்சந்திரன் அஸ்வின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய நெருக்கடியான நேரத்தில் சதம் அடித்திருந்தார். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே அவருடைய பேட்டிங் ஐபிஎல் முதற்கொண்டு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் ஐபிஎல் தொடரில் 140 என்று ஆச்சரியமான அளவில் இருக்கிறது.
மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய பந்து வீச்சு மூளை தன்னுடைய பேட்டிங் என்பது குறிப்பிட்டது தனக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது என்றும், இதன் காரணமாக பேட்டிங் செய்யும் பொழுது பந்துவீச்சை தள்ளி வைத்து விடுவதாகவும், இதன் காரணமாகவே கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தன்னுடைய பேட்டிங் சிறந்த முறையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதுவெல்லாம் வியாபாரம் நான் அப்படி சொல்ல மாட்டேன்
இந்த நிலையில் சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அனுபவம் குறித்து பேசும்பொழுது கில் பற்றிய பேச்சு வந்தது. அப்பொழுது கில் இந்திய கிரிக்கெட்டின் இளவரசன் என்று பேச்சு சென்றது.
இதற்கு பதில் அளித்த ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நான் இந்திய கிரிக்கெட்டின் இளவரசன் அப்படி இப்படி எல்லாம் கூற மாட்டேன். காரணம் அதுவெல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் வியாபாரத்திற்காக மார்க்கெட்டிங் செய்கிறீர்கள். எனக்கு யாரையுமே அப்படி பட்டம் எல்லாம் கொடுத்து அழைப்பது பிடிக்காது. இப்படி வியாபாரத்திற்காக ஏதாவது ஹைப் ஏற்றி விடுகிறார்கள். ஆனால் நான் இதற்குள் செல்ல விரும்பவில்லை”
இதையும் படிங்க : இரானி கோப்பை.. இந்திய அணியிலிருந்து அனுப்பப்படும் முக்கிய வீரர்.. 2வது பங்களாதேஷ் டெஸ்ட் முன் பிசிசிஐ முடிவு
“இதைத் தாண்டி கில் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்றால் மிகச் சிறப்பான திறமை கொண்ட பேட்ஸ்மேன். அற்புதமாக விளையாட கூடியவர். இந்திய கிரிக்கெட்டின் சிறந்த இளம் பேட்ஸ்மேனாக இருக்கிறார். இந்த விஷயத்தில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.