இந்திய கிரிக்கெட்

நான் தோத்து கூட போவேன்.. ஆனா வாழ்க்கையில அத மட்டும் செய்யவே மாட்டேன் – அஸ்வின் ஓபன் டாக்

தற்போதைய கிரிக்கெட்டர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினை மிகவும் புத்தி கூர்மையான கிரிக்கெட்டர் என வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கூறுவார்கள். கிரிக்கெட் தாண்டியும் வாழ்க்கை குறித்தான அவரது கருத்துக்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தக் கூடியது. இந்த நிலையில் தோற்றாலும் ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டை முழுவதுமாக மூளையை பயன்படுத்தி விளையாடக் கூடிய வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். அவருடைய திறமையை கட்டுப்படுத்தக் கூடிய விஷயமாக அவருடைய அறிவுதான் இருக்கிறது. சூழ்நிலையை உணர்ந்து, எதிரில் இருக்கும் வீரரை உணர்ந்து அதிலிருந்தே தனது திறமையை தேவைக்கேற்ற வகையில் பயன்படுத்தக்கூடியவர்.

தமிழகத்தில் இருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு சென்ற வீரர்களில் தற்போது வரை அஸ்வின்தான் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்த முதல் நிலை வீரராக இருக்கிறார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனில் கும்ப்ளேவுக்கு பிறகு இந்திய அணிக்காக 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாபெரும் சாதனைகள் படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் “நான் பாதுகாப்பற்றவனாக இல்லை. அதே சமயத்தில் நான் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதைவிட தோல்வி அடைவது மேல் என்று நினைக்கக் கூடியவன். இதுதான் என்னுடைய கேரக்டர். மேலும் மக்களிடம் இருக்கும் பொதுவான பாதுகாப்பற்ற உணர்வு என்னிடம் கிடையாது. சிறுவயதிலேயே நான் பாதுகாப்பற்ற உணர்வை விட்டு வெளியே வந்து விட்டேன். மற்றவர்களின் இந்த உணர்வை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுக் கொண்டேன். இப்படித்தான் நான் விளையாட்டு மற்றும் வாழ்க்கையை பார்க்கிறேன்.

- Advertisement -

நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்கிறேன் அவ்வளவுதான். ஏ, பி, சி என்று எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை குறித்து எனக்கு எந்த கவலையும் கிடையாது. நான்தற்போது இருக்கும் இடத்தில் இருக்கிறேன். நான் பொதுவாக படைப்பாற்றல் இருக்கக்கூடிய நபர். நான் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கட்டாயம் செய்வேன். பிறகு அதில் இருக்கும் சரி தவறுகளை தெரிந்து கொள்வேன்.

தற்போது என்னிடம் இருக்கும் நேரம் குறைவு என்று நான் உணர்கிறேன். இதற்கு ஏற்றபடி நான் என்னுடைய திட்டங்களை அமைத்துக் கொள்கிறேன். கிரிக்கெட் என்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி நேரத்தை எடுத்துக் கொண்டு விட்டது என்று எனக்கு தெரியும்.ஆனால் கோவிட் எனக்கு நின்று நிதானமாக சிந்திக்கும் ஓய்வு காலத்தை கொடுத்தது. நான் எங்கு இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்.

இதையும் படிங்க : 2024 டி20 உலக கோப்பை சிறந்த இன்னிங்ஸ்.. கோலி கிடையாது.. இவருடையதுதான் – ஆர்சிபி முன்னாள் கோச் பேட்டி

கோவிட் கொடுத்த நான்கு ஆண்டு கட்டாய ஓய்வு என்னை வெளிப்படுத்தவும், என்னுடைய படைப்பாற்றல்களை விரிவு படுத்தவும், மேலும் பலவற்றை செய்யவும் எனக்கு சிறகுகள் கொடுத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Ravi Ashwin