2 போட்டி 126 ரன்.. டிஎன்பிஎல் பேட்டிங்கில் அசத்த.. ஐபிஎல் 2024ல் எடுத்த முடிவு தான் காரணம்.. அஸ்வின் பேட்டி

0
342

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக திகழும் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக கேப்டனாகவும், பேட்ஸ்மேன் ஆகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திருப்பூர் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மூன்றாவது வரிசையில் களம் இறங்கி இவர் அடித்த 30 பந்துகளில் 69 ரன்கள் திண்டுக்கல் அணி இறுதி போட்டிக்கு முன்னேற உதவியது. கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் அஸ்வின் 126 ரன்கள் குவித்திருக்கிறார்.கடந்த ஐபிஎல் தொடரில் (2024 ஐபில் தொடரில்) தனது பேட்டிங் குறித்து சில விஷயங்களை முடிவெடுத்ததாக அஸ்வின் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளராக திகழும் அஸ்வின் பந்து வீச்சில் முதன்மையான வீரராக கருதப்பட்டாலும், பேட்டிங்கிலும் இவரால் நன்றாக செயல்பட முடியும். உதாரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இக்கட்டான சூழ்நிலைகளில் பல நல்ல இன்னிங்ஸ்களை விளையாடி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடக்க காலத்தில் தொடக்க வீரராகவும் களமிறங்கி விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வின், தமிழ்நாட்டில் நடைபெறும் டிஎன்பிஎல் தொடரிலும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த டிஎன்பிஎல் தொடரில் பேட்டிங்கில் மேலும் முக்கிய பங்காற்றி வருகிறார். அதிலும் குறிப்பாக திருப்பூர் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் அரையிறுதி முக்கியமான போட்டியில் 30 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களுடன் 69 ரன்கள் குவித்து திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கடந்த ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங்கில் முன்னேற்றம் அடைய விரும்பியதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது “கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எல்லாமே சரியாக நடந்து கொண்டிருக்கிறதா? என்று பார்த்தால் இவை அனைத்தும் திரும்பத் திரும்ப பயிற்சி செய்வதன் மூலமாகவும், விளையாட்டை அதன் கோணத்தில் இருந்து புரிந்து கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடரில் எனது ஆட்டத்தையும், பேட்டிங்கை விரிவுபடுத்த வேண்டும் என்று உணர்ந்தேன்.

ஏனென்றால் பந்து தரையில் இருக்கும் போது எனது கால்களை பயன்படுத்தி அதை அடிக்க முடியும் என்று தெரியும். நான் வேறு ஏதாவது விஷயங்கள் செய்ய விரும்புகிறேனா என்பது எனக்குள் நானே கேட்டுக் கொள்ளக் கூடிய ஒரு விஷயமாகும். அந்தக் கேள்வியை எனக்குள் கேட்டு பதிலை கண்டுபிடிக்க முடிந்தால் அது விளையாட்டை ஆராய்ந்து என்னை ஆர்வமாக வைத்திருக்க எனக்கு புதிய வழியை தருகிறது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:கம்பீர் சீக்கிரத்தில் இந்திய அணியை விட்டு வெளியே போய்விடுவார்.. காரணம் இதுதான் – ஜோகிந்தர் சர்மா பேட்டி

இன்று நடைபெற உள்ள டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஷாருக்கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இரண்டு அணிகளுமே இந்த தொடரில் மிக வலுவானது என்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு மிக சுவாரசியமாக இருக்கும்.

- Advertisement -