இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் கடைசியாக சாம்பியன் டிராபி தொடரில் விளையாடிய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த அணிக்கு இளம்வீரான சுப்மான் கில் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா தொடரோடு விராட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஒரு நாள் தொடரிலிருந்தும் ஓய்வு பெறப் போகிறார்கள் என்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான மதன்லால் இவர்கள் இருவரும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் எனவும், ஓய்வை அறிவிக்கும் போது அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைக்கக் கூடிய அளவுக்கு தகுதியான நபர்கள் என்று பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும் பிரியாவிடைக்கு அவர்கள் தகுதியானவர்கள். இது எப்படி என்றால் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற்ற போது உலகம் கண்டது போன்றதாகும். இந்தியாவும் அதே வழியில் இவர்களை மதிக்க வேண்டும். இவர்கள் போன்ற வீரர்கள் ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி பதவி பறிப்பு.. பின்னணியில் இந்திய அணி.. புதிய கேப்டன் யார்?
விராட் கோலி இப்போது வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வதால் அவர் தனது பாதுகாப்பு நிலையில் இருந்து வெளிவர வேண்டும். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். அவரது உடல் தகுதி, பசி மற்றும் ஆர்வம் ஆகியவை உயர்ந்த தரத்தை நிர்ணயித்துள்ளன. அவருக்கு இப்போது தேவைப்படுவது ஒரு மன வலிமையாகும். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவாக ஓய்வு பெற்றது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது” என்று கூறுகிறார்.






