தற்போது இந்திய கிரிக்கெட்டில் சிறந்த திறமைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற காரணத்தினால் தேர்வுக்குழு தலைவராக இருப்பது கடினமான வேலை என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் 15 வயதான வைபவ் சூரியவன்சி அதிரடியில் மிரட்டி வருகிறார். அதே சமயத்தில் அனுபவ வீரர் விராட் கோலியும் அதிரடியாக விளையாடி ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் தொடர்ந்து இருக்கிறார்.
விராட் ஓய்வு பெற்றது நல்லது
தற்போது இந்திய டி20 கிரிக்கெட் அணியில் யாரை தேர்வு செய்வது என்று பெரிய போட்டி சென்று கொண்டிருக்கிறது. டி20 வடிவத்தில் ஒதுக்கப்பட்ட கில் கூட நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைவசம் வைத்திருக்கிறார்.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “@இப்போது கூட இந்திய டி20 அணியில் தொடக்க ஆட்டக்காரராக இருக்க விராட் கோலி தகுதியானவர். நல்ல வேலை அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இல்லையென்றால் அவரும் தற்போது போட்டியில் இருந்திருப்பார்”
மாலத்தீவு ஓடிவிடுவேன்
“இன்னொரு பக்கத்தில் ஜெய்ஸ்வால் சிறப்பான முறையில் இருந்து வந்திருக்கிறார். உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை நீக்க முடியாது. அபிஷேக் ஷர்மாவும் ஹைதராபாத்துக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். இன்னொரு பக்கத்தில் வைபோ சூர்யவம்சம் 220 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதில் கில் தற்போது ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் இவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டிருப்பது ஒரு பக்கம் அதிர்ஷ்டம் இன்னொரு பக்கம் துரதிஷ்டம்”
இதையும் படிங்க : யாரும் ருதுராஜை திட்டாதீங்க.. இஷான் கிஷான் வரலாறு போய் பாருங்க.. தோனி காலம் முடிந்துவிட்டது – அஸ்வின் வேண்டுகோள்
“நான் அஜித் அகர்கராக இருந்தால் தேர்வுக்குழுவை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்று விடுவேன். மொபைலை எடுக்கவே மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.






