நடப்பு ஐபிஎல் சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெறாததற்கு ருதுராஜை விமர்சிக்க கூடாது என ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி அதில் ஆறு போட்டிகளை வென்று 12 புள்ளிகள் பெற்று முடித்திருக்கிறது. கூடுதலாக இன்னும் இரண்டு போட்டிகளை வென்று இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்க முடியும்.
ருதுராஜை திட்டக்கூடாது
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “ருதுராஜ் நல்ல வீரர்தான். சில நேரங்களில் சரியாக விளையாட முடியாமல் போவது எல்லோருக்கும் நடக்க கூடியது. இதற்காக மக்கள் ருதுராஜை திட்டுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த மாதிரியான நேரத்தில் திட்டக்கூடாது”
“இஷான் கிஷானை அதிக விலை கொடுத்து மும்பை ஆரம்பத்தில் வாங்கியது. ஆனால் அவரால் அங்கு சிறப்பாக விளையாட முடியவில்லை. தற்போது ஹைதராபாத் அணிக்கு வந்து மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுபோல சூழ்நிலைகள் மாறும்”
சிஎஸ்கே சிறந்த அணி இல்லை
“சிஎஸ்கே இந்த சீசனில் ஒரு சிறந்த அணி இல்லை என்பதை பலரும் புரிந்து கொள்ளவில்லை. தோனி கடந்த 18 வருடங்களில் ஒரு பழக்கத்திற்கு எல்லோரையும் கொண்டு வந்து விட்டார். பிளே ஆப் சுற்றுக்கு செல்வது எளிது என்று அவர் காட்டிவிட்டார். ஆனால் அது உண்மையில் எளிதல்ல”
இதையும் படிங்க : எங்களை யாரும் இந்த விஷயத்துல நம்பறது இல்ல.. ஆனா நாங்க அதை தாண்டி சாதிச்சிருக்கோம் – ருதுராஜ் வருத்தம்
“இப்போது 10 அணிகள் உள்ளன. இதில் எந்த அணி எந்த அணியை வேண்டுமானாலும் வெல்ல முடியும். இப்போது பிளே ஆப் சுற்றுக்கு செல்வது மிகவும் கடினமானது. இப்போது உள்ள சிஎஸ்கே அணி தனக்கு கீழே திறமையில் உள்ள அணிகளை மட்டுமே வென்று இருக்கிறது. ஆனால் அந்த அணியில் சிறந்த எதிர்கால திறமைகள் உள்ளன” என்று கூறி இருக்கிறார்.






