விராட் கோலியுடன் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை ஒப்பிடுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அது மிகவும் தவறானது எனவும் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதன் காரணமாக பாபர் அசாம் நீக்க விவகாரத்தில் அவரை விராட் கோலி உடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
பகார் ஜமான் வெளியிட்ட கருத்து
2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் விராட் கோலி மிகவும் சிரமப்பட்டதாகவும் அப்போது அவருடைய சர்வதேச டெஸ்ட் சராசரி மூன்று ஆண்டுகளிலும் சுமார் 20க்கும் கீழ் தான் இருந்தது எனவும், ஆனாலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விராட் கோலியை கைவிடவில்லை என்றும், அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதை ஒட்டிய பலரின் கருத்துகளில் பாபர் அசாம் விராட் கோலி போன்றவர் என்றும், எனவே அப்படிப்பட்ட வீரரை நிச்சயமாக அணியில் இருந்து நீக்கி இருக்கக் கூடாது என்றும் இடம்பெற்றிருந்தது. நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்தான விவாதத்தில் இருந்த பொழுதும் இப்படியான கருத்துக்கள் கூறப்பட்டது. அதற்கு உடனடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் மறுப்பு தெரிவித்து பேசி இருக்கிறார்.
விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிடக்கூடாது
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “பாபர் அசாமுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர் கண்டிப்பாக பாகிஸ்தான் அணிக்காக ரன்கள் எடுப்பார். அதற்கான கிளாஸ் அவரிடம் இருக்கிறது என்பதோடு இந்த விவாதத்தை நாம் முடித்துக் கொள்ள வேண்டும். இதில் எல்லை தாண்டி சென்று பாபர் அசாமை விராட் கோலி உடன் ஒப்பிடுவது சரியானது கிடையாது”
இதையும் படிங்க : நியூஸி டெஸ்ட்.. இந்திய நட்சத்திர வீரர் காயம்.. இளம் வீரருக்கு அடிக்கும் லக்.. வெளியான புதிய தகவல்கள்
“நான் பாபருக்காக வருத்தப்படுகிறேன். அவர் உண்மையில் திறமையான வீரர். ஆனால் விராட் கோலியின் திறமை என்பது வேறு. அவர் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சூழ்நிலைகளில் மிக அழுத்தமான நிலைகளில் பெரிய சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் இப்படி செய்ததை இன்னும் யாரும் நெருங்க கூட கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட் என்று எடுத்துக் கொண்டால், விராட் கோலிக்கு பக்கத்தில் ஜோ ரூட் மட்டுமே இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






