நியூஸி டெஸ்ட்.. இந்திய நட்சத்திர வீரர் காயம்.. இளம் வீரருக்கு அடிக்கும் லக்.. வெளியான புதிய தகவல்கள்

0
521
Gill

நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஒருவர் களம் இறங்குவது சந்தேகமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாளை இந்திய அணி மோதி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அங்கு கடுமையான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெளிப்படையாக அறிவித்த ரோகித் சர்மா

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முகமது ஷமி காயம் இன்னும் குணமடையவில்லை என்பதை கூறி, அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கும் கிடைக்க மாட்டார் என்பதை தெளிவுபடுத்தி விட்டார். அவர் பற்றி நிலவி வந்த சந்தேகங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்திய இளம் பேட்ஸ்மேன் சுக்மன் கில்லுக்கு கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலி இருப்பதாக அவர் அணி நிர்வாகத்திடம் கூறியிருப்பதாக செய்திகள் வெளி வருகிறது. எனவே நாளை டாஸ் போடப்படுவதற்கு முன்பாகவே அவர் விளையாடுவாரா இல்லையா? என்பதை முடிவு செய்யப்படும் என்று ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

- Advertisement -

மாறும் கேஎல்.ராகுல் சர்ப்ராஸ் கான் நிலைகள்

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் சுப்மன் கில் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி வருகிறார். இந்த நிலையில் அவர் நாளை முதல் போட்டியில் விளையாடாவிட்டால் அவருடைய இடத்திற்கு கேஎல்.ராகுல் மேலே அனுப்பப்படுவார் என்று தெரிகிறது. அவர் டாப் ஆர்டரில் விளையாடக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஹர்திக் ஆட்டம் இப்போ வேற லெவல்.. ஆனா அதைவிட டீம்ல அவர் இதை ஏத்துக்கிட்டது ரொம்ப பெரிய விஷயம் – ஆஸி பிராட் ஹாக் பேட்டி

மேலும் சுப்மன் கில் உடைய இடத்திற்கு இன்னொரு இளம் வீரரான சர்ப்ராஸ் கான் கொண்டுவரப்படுவார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கேஎல்.ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை டாஸ் போடப்படும் வரை இது குறித்த உண்மை நிலை தெரிய நாம் காத்திருக்க வேண்டும்!

- Advertisement -