தற்போது பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பெரிய சரிவுகளை சந்தித்து வருகிறது. இரண்டு உலகக் கோப்பை தொடர்களை மிகவும் மோசமான முறையில் தோற்று இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்றதோடு அறிமுக அணியான அமெரிக்க அணியிடமும் உலகக் கோப்பையில் தோற்றது.
பாகிஸ்தான் பெருமைக்குரிய கிரிக்கெட் தேசம்
இந்த நிலையில் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் சரிவுக்கு பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “பாகிஸ்தானின் தற்போதைய நிலை என்னை வருத்தப்படுத்துகிறது எனும்பொழுது நான் கொஞ்சம் உண்மையை பேச விரும்புகிறேன். பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட்டுக்காக சிறந்த வீரர்கள் வந்து விளையாடி இருக்கிறார்கள். பாகிஸ்தான அணி சிறந்த அணியாக இருந்திருக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரரின் பார்வையில் பாகிஸ்தான் பெருமைக்குரிய கிரிக்கெட் தேசம். தற்போதுஅவர்களின் திறமையான வீரர்கள் எங்கே இருக்கிறார்கள்?”
நிலையில்லாத தன்மையே காரணம்
மேலும் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “பாகிஸ்தான் கிரிக்கெட்டில் போட்டி நடந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. மேலும் அந்த இசை நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக நாற்காலியை நோக்கி வீரர்கள் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்”
“2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். ஷாகின் அப்ரிடி புதிய கேப்டனாக கொண்டுவரப்பட்டார். மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஷான் மசூத் கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வென்று ஆயிரம் நாட்களுக்கு மேலாகிவிட்டது”
இதையும் படிங்க : விராட் கோலி கிடையாது.. இந்திய அணியில் இவர்தான் ஸ்லெட்ஜிங் கிங் – ஆஸி வீரர்கள் வித்தியாசமான தேர்வு
“இப்படியான சூழ்நிலைகள் இருந்தால், ஒரு கிரிக்கெட் வீரராக நான் என்ன நினைப்பேன்? நான் எனது விளையாட்டில் மற்றும் அணியில் கவனம் செலுத்துவேனா?அல்லது என்னுடைய இடத்தை பற்றி கவனம் செலுத்துவேனா? இப்படி குழப்பமான நிலையற்ற சூழ்நிலை இருந்தால் வீரர்கள் தங்களைப் பற்றித்தான் நினைப்பார்கள். அணியை பற்றி குறைவாகவே சிந்திப்பார்கள். இதுதான் தற்போது அவர்களுடைய பிரச்சினையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






