கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களம் இறங்கி தனது அதிரடியை காட்டிய 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி அண்டர் 19 கிரிக்கெட்டில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் அவரது திறமை குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 14 வயது அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அவர் அடித்த சதம் அவருக்கு ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது. தற்போது அனைவரின் பார்வை அவர் மீது விழுந்திருக்கும் நிலையில் அண்டர் 19 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
உள்ளூர் கிரிக்கட் தொடர்களில் 171(95), 50(26), 190(84), 68(24), 108*(61), 46(25) & 127(74) தனது திறமையை மேலும் மேலும் நிரூபித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் வைபவின் இந்த திறமையை பாராட்டி சில கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “வைபவின் திறமையை பார்த்தால் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. 171(95), 50(26), 190(84), 68(24), 108*(61), 46(25) மற்றும் 127(74). இந்த ரன்கள் அனைத்தும் கடந்த 30 நாட்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் அடித்த அசாதாரண ரன்கள் ஆகும். என்ன தம்பி இந்த அடி போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா.? 14 வயதில் இந்த குழந்தை செய்வதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இதையும் படிங்க:வெறும் 16 ஓவர்.. இலங்கை அணியை பண்டல் செய்து.. பாகிஸ்தான் அசத்தல் வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வி
விரைவில் நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அண்டர் 19 உலக கோப்பையில் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சஞ்சுவின் இடத்தை பிடித்து ஐபிஎல் தொடரில் ஒரு தொடக்க வீரராக இந்த ஆண்டு முழு பருவத்தில் விளையாட உள்ளார். இந்த நிலையில் அடுத்த நான்கு மாதங்களுக்கான வைபவின் கண்காணிப்பு மிகவும் விறுவிறுப்பாக இருக்கப் போகிறது. இது அவருடைய மன உறுதி வெற்றி வேட்கை குணாதிசயம் என அனைத்தையும் நமக்கு தெரிவிக்கப் போகிறது” என்று அஸ்வின் வெளிப்படுத்தி இருக்கிறார்.






