இன்று இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேட்டிக் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி அடுத்து நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் வைத்து விளையாடுகிறது. எனவே முன் பயிற்சிக்காக இலங்கை அணி உடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
பந்துவீச்சில் கலக்கல்
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 12, கமில் மிஸ்ரா ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து குசால் மெண்டிஸ் 14, தனஞ்செய டி சில்வா 10, சரித் அசலங்கா 18, ஜனித் லியாங்கே 40, வனிந்து ஹசரங்கா 18, டசன் சனகா 18 ரன்கள் எடுத்து இழந்தார்கள். இலங்கை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சில் சல்மான் மிஸ்ரா மற்றும் அப்ரார் அகமது தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
பாகிஸ்தான் அதிரடி
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சையும் அயூப் 18 பந்தில் 24 ரன்கள், பர்கான் 36 பந்தில் 51 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பாகிஸ்தான் பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து வெற்றியை அங்கேயே உறுதி செய்தது.
இதையும் படிங்க : 393 ரன்.. 63 பந்தில் வைபவ் சூரியவன்சி மீண்டும் ருத்ரதாண்டவ சதம்.. இந்தியா அசத்தல்.. தென் ஆப்பிரிக்கா பரிதாபம்
இறுதியில் சதாப் கான் ஆட்டம் இழக்காமல் 12 பந்தில் 18 ரன்கள் எடுக்க பாகிஸ்தான அணி 16.4 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இலங்கை அணியை விட பாகிஸ்தான் மேல்நிலைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.






