இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார்.
இந்த நிலையில் தனது சக ஐபிஎல் வீரரான ஜேமி ஓவர்டன் பிக் பாஸ் லீக்கில் செய்த சம்பவம் குறித்து தனது கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வினின் மான்கட்
ரவிச்சந்திரன் அஸ்வின் சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்லாமல் அதன் நுணுக்கங்களை ஆழமாக தெரிந்து வைத்திருக்கக் கூடிய அரிதானவர்களில் ஒருவர். கிரிக்கெட் விளையாடாத சமயங்களில் அதனை பற்றி பேசுவதும், பல வீரர்கள் குறித்து தெரிந்து கொள்வதும் என அதனைச் சுற்றி பல விஷயங்கள் செய்து கொண்டிருப்பார். இந்த நிலையில் கிரிக்கெட்டில் ஒரு விதியாகக் கருதப்படும் மான்கட் எனும் விதியை ஆடுகளத்தில் பயன்படுத்தக்கூடிய அரிதான வீரர்களில் இவரும் ஒருவர்.
அதாவது ஒரு பவுலர் பந்து வீச வரும் முன்பு எதிர் முனையில் இருக்கக்கூடிய பேட்ஸ்மேன் தனது எல்லைக் கோட்டினை விட்டு நகர்ந்தால் அவரை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றலாம். இது கிரிக்கெட் விதியாக மட்டுமே இருக்கும் நிலையில் அதனை அரிதாக பயன்படுத்தும் வீரர்களில் அஸ்வின் ஒருவர். இதனை ஐபிஎல் தொடர்களில் பயன்படுத்தி இந்த விதி பேசுபொருளாக மாறியது. இந்த சூழ்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடப் போகும் சக ஐபிஎல் வீரர் ஜேமி ஓவர்டன் பிக் பாஸ் லீக் தொடரில் அஸ்வினை போன்று மான்கட் செய்த கவனத்தை ஈர்த்துள்ளார்.
அஸ்வின் கொடுத்த ரியாக்சன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் ஜேமி ஓவர்டன் பெர்த் ஸ்கார்க்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தனது 7.4வது ஓவரில் பந்து வீச வரும்போது எதிர்முனையில் நின்று கொண்டிருந்த பின் ஆலன் க்ரீசை விட்டு வெளியேற இதனை கவனித்த ஜேமி உடனே அவுட் செய்து அப்பீல் செய்யாமல் எச்சரித்து விட்டுவிட்டார். இதனை கவனித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க:ரெய்னாவுடன் சேர்ந்து.. நான் இந்த விஷயத்தை மட்டும் செய்யவே மாட்டேன் – மகேந்திர சிங் தோனி பேட்டி
இதுகுறித்து அவர் “நமது தாக்கம்(வைப்) ஒரு தலைமுறையை ஈர்க்கும் ஜேமி” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அஸ்வின் மற்றும் ஜேமி ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அடிலெய்டு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவிக்க பெர்த் அணி 15 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.






