அடுத்த வருடம் தென்னாப்பிரிக்காவில் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அணி வடிவமைப்பை தயார் செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் எதிர்காலம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அடுத்த வருடம் தென்னாபிரிக்காவில் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி அடுத்த வருடம் நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் இருவருமே காயத்தில் சிக்கி இருப்பது சற்று பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்ததாக நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். அதேபோல ரோஹித் சர்மாவும் ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாடாமல் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அடுத்த உலக கோப்பையில் இவர்கள் இருவரும் விளையாடுவார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத தகவலாக உள்ளது என்று சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும்போது “விராட் கோலியின் உடல் தகுதி சிறப்பாக இருந்து வருகிறது ஆனால் ரோஹித் சர்மா கடந்த காலங்களில் தொடை தசை பகுதியில் காயங்களை சந்தித்து வருகிறார். எனவே அவர் தொடர்ந்து களத்தில் நீடிக்க அதிக கவனம் செய்து விளையாட வேண்டும். ஏனென்றால் இந்த இருவரில் ஒருவருக்கு ஏற்படும் காயம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பாக அமையும். உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இப்படி இருக்கக் கூடாது எனவே ரோகித் தனது உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.
எந்த ஒரு காயமோ சரிவோ இவர்கள் இருவரின் மீதும் சிறிது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். உலகக் கோப்பைக்கு இவர்கள் இருவரையும் நிர்வாகம் விரும்பினால் சாதகமான சூழ்நிலை இவர்களுக்கு போதுமான அளவில் இருந்தால் இவர்களை பயன்படுத்திக் கொள்ள இந்திய நிர்வாகம் விரும்பும். ஆனால் நிலைமை வேறு விதமாக மாறும் என்ற நிலை வந்தால் இவர்கள் இருவருமே அழுத்தத்திற்கு உள்ளார்கள்” என்று அவர் பேசியிருக்கிறார்.