என்னதான் கலாய்ச்சாலும்.. விராட் கோலியை முந்தி சாதனை படைத்த பாபர் அசாம்.. ஒரு நாள் தொடரில் மாஸ் ரெக்கார்டு

0
326

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரரான பாபர் அசாம் விராட் கோலியின் சிறப்பான ரெக்கார்டு ஒன்றை முறியடித்திருக்கிறார்.

- Advertisement -

முத்தரப்பு ஒரு நாள் தொடர்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானில் விளையாடி வருகிறது. இதன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக விளையாடி தென் ஆப்பிரிக்கா அணியின் 352 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தற்போது இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி உள்ளது.

இந்த சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் குவித்தது. இதில் பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 76 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 46 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 29 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலியின் சிறப்பான சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியை முந்தி சாதனை

அதாவது பாபர் அசாம் தனது 126 வது போட்டியில் விளையாடும் நிலையில் 6000 ரன்களை கடந்து சாதனை படைத்திருக்கிறார். விராட் கோலி 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தனது 136வது இன்னிங்ஸில் 6000 ரன்கள் கடந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 139 இன்னிங்ஸிலும், ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 139 இன்னிங்ஸ்களிலும் இந்த ரன்கள் கடந்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க:சாம்சன் டி20ல செஞ்சதுக்கு நேர்மாறா ஸ்ரேயாஸ் ஐயர் பண்ணாரு.. இத செஞ்சனாலதான் ஜெயிக்க முடிஞ்சது – பீட்டர்சன் கருத்து

மேலும் முன்னாள் தென்னாபிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா அதே 123வது இன்னிங்ஸில் 6000 ரன்கள் கடந்து சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் அசாமின் பேட்டிங் குறித்து தற்போது பல விமர்சனங்கள் இருந்தாலும் இந்த சாதனையை பொறுத்தவரை விராட் கோலியை விட சிறப்பாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாபர் அசாம் மீண்டும் தனது பழைய பேட்டிங் ஃபார்மை மீட்டெடுப்பார் என்று நம்பலாம்.

- Advertisement -