கடமைக்கு டி20 உ.கோ-யை நடத்துறிங்களா?.. மழைக்கு போட்டிய வேற இடத்துல மாத்துங்க – அஸ்வின் தந்த விளக்கம்

0
257
Ashwin

ஐசிசி 9வது டி20 உலகக் கோப்பை தொடரில் ஏ பிரிவில் முக்கியமான மூன்று போட்டிகள் மழையின் காரணமாக நடைபெற முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. மழை கட்டாயம் வரும் என்று தெரிந்தாலும் போட்டிகளை ஏன் ஐசிசியால் மாற்ற முடியாது என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்திருக்கிறார்.

தற்போது ஏ பிரிவில் இருந்து அமெரிக்கா பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து என மூன்று அணிகளுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடிவதற்கான வாய்ப்பு இருக்கின்றன. இதில் அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள்ஒரு போட்டியில் விளையாட வேண்டி இருக்கிறது. மேலும் இந்தியா மற்றும் கனடா அணிகள் ஒரு போட்டியில் விளையாட வேண்டி இருக்கிறது.

- Advertisement -

இந்த மூன்று போட்டிகளுமே அமெரிக்கா ஃபுளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கும் மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. ஆனால் அங்கு தொடர்ச்சியாக மழை கடுமையாகப் பெய்து வருகிறது. இதனால் போட்டிகள் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. இதே மைதானத்தில் சில நாட்களுக்கு இலங்கை நேபாள் போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மழை அச்சுறுத்தல் இருக்கும் என்று தெரிந்தும் ஐசிசி போட்டிகளை அமெரிக்காவில் வேறு மைதானங்களுக்கு மாற்றாதது ஏன் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். மழையின் காரணமாக திறமை இருந்தும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் அணிகள் வெளியேறுவது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “சமூக வலைதளத்தில் பலர் இம்மாதிரியான கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். நான் இதற்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன். நாம் நினைப்பது போல ஐசிசி யால் நினைத்ததும் போட்டியை அடுத்த மைதானத்திற்கு மாற்றி விட முடியாது. அது பல விஷயங்களில் பிரச்சனைகளை உண்டு செய்யும்.

இதையும் படிங்க : நான் விராட் கோலி பேட்டிங் பத்தி பேசறதா?.. என்ன விளையாடறிங்களா – ஷிவம் துபே தரமான பதில்

தற்பொழுது போட்டிகளை நடத்துவதற்கு பொருளாதாரம் முக்கியம். இதற்கு ஸ்பான்ஸர்களை நம்பியே ஐசிசி இருக்கிறது. போட்டி நடக்கும் மைதானத்தில் ஏற்கனவே ஐசிசி ஸ்பான்ஸர்களை பிடித்திருக்கும். அதிலிருந்து கிடைக்கும் பணத்தில்தான் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. புதிய மைதானத்திற்கு உடனே மாறினால் இந்த ஸ்பான்சர் கிடைக்காது. மேலும் விமான டிக்கெட் புக்கிங் என்பதும் பெரிய விஷயம். அடுத்துபுதிய மைதானத்திற்கு அருகில் வீரர்களுக்கு ஹோட்டல் தேவைப்படும். ஒரு அணிக்கு மட்டுமே 35 ஹோட்டல் அறைகள் தேவைப்படுகிறது. எனவே இதையெல்லாம் உடனே ஏற்பாடு செய்ய முடியாது. எனவே போட்டியை நினைத்தபோது அடுத்த மைதானத்திற்கு மாற்ற முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -