என்ன சொன்னாலும் கில் துணை கேப்டனுக்கு தகுதியானவர்.. அதுக்கு காரணம் இதுதான் – அஸ்வின் கருத்து

0
35
Ashwin

தற்போது சாம்பியன் டிராபி இந்திய அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது சரியானது என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதற்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மற்றும் துபாய் என இரு நாடுகளில் நடக்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும் துணை கேப்டனாக சுப்மன் கில்லும் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் கடுமையான விமர்சனம்

சுப்மன் கில் ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களின் போது இந்திய அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். ஏற்கனவே செய்ததை மீண்டும் தொடர்ந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் மிக மோசமான முறையில் விளையாடிய காரணத்தினால் அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும் ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதன் காரணமாக இந்த முடிவை எதிர்த்து கடுமையான விமர்சனத்தை சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகிறார்கள்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “நான் சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது சரி அல்லது தவறு என்று பேச வரவில்லை. அவருக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதற்கு என்ன மாதிரியான பாயிண்ட் இருக்கிறது என்பது குறித்து பேசுகிறேன். ஏற்கனவே அவருக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது துணை கேப்டன் பொறுப்பு கொடுத்திருந்தார்கள். தற்போது அதை மீண்டும் தொடர்ந்திருக்கிறார்கள்”

இதையும் படிங்க : ஒரே ஒரு பஸ்.. யாருக்கும் இதுக்கு அனுமதி இல்லை.. பிசிசிஐ ரூல்ஸை ஸ்ட்ரிக்டா பாலோ செய்யும் கொல்கத்தா.. இங்கி டி20

“இது எதிர்காலத்திற்கான ஒரு தொலைநோக்கான முடிவு. எதிர்காலத்தில் யார் கேப்டனாக இருக்க முடியும் என்று அவர்கள் பார்க்கிறார்கள். ஏனென்றால் பிளேயிங் லெவனில் தொடர்ந்து இடம்பெறக்கூடிய சாத்தியத்தில் யார் எடுக்க முடியும் என்பதை வைத்து அவர்கள் கில்லை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். மேலும் எதிர்காலத்தில் கில் கேப்டனாக இருக்கும் பொழுது, அவர் அனுபவம் வாய்ந்த விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோரிடம் ஆலோசனைகளை எடுத்துக் கொள்ள முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -