இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வு பெற்றது குறித்து அவரது தந்தை சில அதிர்ச்சியான விஷயங்களை கூறி இருந்தார். தற்பொழுது அதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மறுப்பு தெரிவித்து பேசி இருக்கிறார்.
நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் இருந்து ஓய்வை அறிவித்ததோடு, நேற்று ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பி இன்று சென்னை வந்து சேர்ந்து விட்டார். ஒரே நாளுக்குள் ஒரு இந்திய ஜாம்பவான் வீரரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்ததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அஸ்வின் தந்தை பரபரப்பு கருத்து
இது குறித்து பேசி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தான் ஓய்வு பெறுவது குறித்த எண்ணங்கள் முன்னிருந்தே உள்ளுணர்வாக மனதில் இருந்து வந்ததாகவும், மூன்றாவது டெஸ்ட் நான்காவது நாளில் உறுதியாக ஓய்வு பெற்று விடலாம் என்று உணர்ந்து விட்டதாகவும், அதை ஐந்தாவது நாளில் அறிவித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் அவரது தந்தை அஸ்வினுக்கு அவரது அணியில் தொடர்ந்து அவமரியாதை செய்யப்பட்டு வந்ததாகவும், அவமானத்தை ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் அஸ்வின் ஓய்வு பெற்று விட்டதாக தான் நினைப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
அஸ்வின் தந்த நகைச்சுவை விளக்கம்
இந்த நிலையில் சுமந்த் சி ராமன் ட்விட்டரில் அஸ்வினை டேக் செய்து அவருடைய தந்தை கூறி இருப்பது பற்றி பதிவு செய்திருந்தார். இது பெரிய அளவில் பரபரப்பாக செல்வதை உணர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதற்கு தன்னுடைய பாணியில் நகைச்சுவையான முறையில் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க : 54 ரன்னில் சுருண்ட ஜிம்பாப்வே.. அபார சதம் அடித்த இளம் வீரர்.. ஆப்கான் அசத்தல் வெற்றி.. 2வது ஒருநாள் போட்டி
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் செய்துள்ள ட்வீட்டில் “என் அப்பா மீடியா முன்பு பேசுவதற்கு பயிற்சி பெற்றவர் கிடையாது. டேய் பாதர் என்னடா இதெல்லாம்? இப்படி அப்பாவின் ஸ்டேட்மெண்ட் எல்லாம் பாலோ செய்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவரை மன்னித்து விட்டு விடுங்கள் என்று நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவருடைய பாணியில் கூறியிருக்கிறார்.