“500 விக்கெட் சாதனையை இவருக்கு அர்ப்பணிக்கிறேன்.. அவர்தான் எல்லாமுமாக இருந்தார்” – அஷ்வின் உருக்கம்

0
482
Ashwin

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய தரப்பிலிருந்து மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடைபெற்று வந்து கொண்டிருக்கின்றன.

நேற்று சர்ப்ராஸ் கான் அறிமுகமும், அவரது தந்தையின் உருக்கமும் சமூக வலைதளங்களை முழுக்க இந்தியாவில் ஆக்கிரமித்து இருந்தது. அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக அவர்களது நிகழ்வு அமைந்திருந்தது.

- Advertisement -

இன்றைய போட்டியில் இங்கிலாந்தின் பென் டக்கெட் மிகச் சிறப்பாக விளையாடி அதிரடியாக 88 பந்தில் சதம் அடித்திருந்த போதும், ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரையே சமூக வலைதளங்கள் மிக அதிகமாக உச்சரித்து வருகின்றன.

காரணம் இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 500 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்தியர் என்றும், உலக அளவில் இரண்டாவது அதிவேகமாக 500 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. தற்பொழுது அவருக்கு உலகம் முழுக்க இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தன்னுடைய சாதனை குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் ” இது ஒரு மிக நீண்ட பயணம். இந்த சாதனையை நான் என் தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். நான் விளையாடுவதை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு மாரடைப்பு வந்திருக்கலாம். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர் எனக்கு எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் எல்லாமும் ஆக இருந்திருக்கிறார்.

தற்பொழுது இங்கிலாந்து அணி பேட்டிங்கில் டி20 கிரிக்கெட் விளையாடுவது போல இன்டென்டை காட்டி வருகிறது. நாம் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : 29 ஓவர் 176 ரன்.. ஒரே செசனில் மேட்சுக்குள் வந்த இங்கிலாந்து.. பென் டக்கெட் ருத்ர தாண்டவம்

நாங்கள் இந்த தொடரில் விளையாடும் விக்கட்டுகள் எல்லாமே முதல் மூன்று நாட்கள் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவே இருக்கிறது. கடைசி நாள் பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தற்பொழுது ஆட்டம் சமநிலையில் இருக்கிறது. முன்பும் இதே போல் ஆட்டம் இருந்திருக்கிறது. தற்பொழுது அவர்கள் எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள். நாங்கள் இப்போது சரியாக இருப்பது முக்கியம்” எனக் கூறியிருக்கிறார்.