இங்கி ஆஸி முதல் டெஸ்ட்.. 19 விக்கெட்.. எங்களை குறை சொன்ன வாய்கள் எங்கே போச்சு? – அஸ்வின் விமர்சனம்

0
72
Ashwin

இன்று இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆசஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 19 விக்கெட்டுகள் விழுந்திருப்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருக்கிறது. ஒரே நாளில் மட்டும் 19 விக்கெட்டுகள் விழுந்திருக்கின்றன.

- Advertisement -

கொல்கத்தா ஆடுகள விமர்சனம்

இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு அதிகபட்ச சாதகத்தை கொடுத்தது. இதன் காரணமாக போட்டி இரண்டரை நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் அந்தப் போட்டியில் கூட ஒரு நாளில் 19 விக்கெட்டுகள் விழவில்லை.

இந்த போட்டி முடிவுக்குப் பிறகு இந்தியா மற்றும் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளத்தையும், இந்திய அணி நிர்வாகம் இப்படியான ஆடுகளங்களை விரும்புவது குறித்தும் கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார்கள். இந்த நிலையில் நாளை அசாம் கௌகாத்தி மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்குகிறது.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி

இந்தியாவில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விக்கெட்டுகள் வேகமாக விழுந்தால் விமர்சனம் வருவதும், அதே சமயத்தில் ஆசியா தாண்டி வெளிநாடுகளில் ஏகப்பந்து வீசிக்கு சாதகமான ஆடுகளங்களில் விக்கெட்டுகள் சரிந்தால் அதை யாரும் கண்டு கொள்வது இல்லை என்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க : தெஆ ஸ்டார் வீரர் விலகல்.. அசாம் ஆடுகளம் திருப்தியா இருக்கு.. எங்களுக்கு ஓகே – டெம்பா பவுமா பேச்சு

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிடும் போது ” இன்று பெர்த் மைதானத்தில் ஒரு நாளில் 19 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. ஆனால் இன்று கிரிக்கெட்டுக்கு சிறந்த நாளாக இருந்தது. ஐயோ! இதுவே நாளை கவுகாத்தி மைதானத்தில் நடந்தால் என்ன செய்வது?” என்று நகைச்சுவையாக, அதே நேரத்தில் இந்திய ஆடுகளங்களை குறை சொல்பவர்கள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -