இன்று துபாய் மைதானத்தில் நடக்க இருக்கும் சாம்பியன் டிராபி முதல் செமி பைனலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி எவ்வாறு பந்துவீச்சு திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆலோசனை கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு சமீப காலத்தில் மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வரும் ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டை வரும் சக்கரவர்த்தியை வைத்து எப்படி வீழ்த்த வேண்டும்? என்பது குறித்து விரிவாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரையை எடுத்து வைத்திருக்கிறார்.
புதிய பந்தை வருணிடம் கொடுங்கள்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” புதிய பந்தை வருணிடம் கொடுத்து ஹெட்டுக்கு ஓவர் தி ஸ்டெம்பில் இருந்து பந்து வீச சொல்லுங்கள். ஹெட் எப்பொழுதும் மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி, தனது காலை நகர்த்தி இடம் கொடுத்து பீல்டர்களுக்கு மேல் அடிக்கக் கூடியவர். இதன் காரணமாக இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பை வருண் சக்கரவர்த்தி ஏற்படுத்த முடியும். இந்த மோதல் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கக் கூடியதாக இருக்கும்”
“மேலும் வருணுக்கு எதிராக ஹெட் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் எப்பொழுதும் தாக்குதல் பாணி ஆட்டத்தில் தான் ஈடுபடுவார். இது ரிஸ்க் எடுக்கும் வாய்ப்பாக இருக்கும். ஒன்று அவர் ஆஸ்திரேலியா அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார், இல்லையென்றால் வருண் அவரது விக்கெட்டை கைப்பற்றுவார். ஒருவேளை ஹெட் வருண் சக்கரவர்த்தியை தாக்கி விளையாட வில்லை என்றால், நாம் வருணை ஐந்து ஓவர்கள் அந்த இடத்தில் வீசவைத்து விடலாம்”
இன்னொரு திட்டமும் இருக்கு
“இந்த ஆஸ்திரேலியா அணியில் பல ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிப்பதற்கு நம்மிடம் இரண்டு இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் அக்சர் மற்றும் ஜடேஜா இருக்கிறார்கள். இந்தப் பந்து வீச்சு வரிசையை அழைத்துச் செல்வது குறித்து நான் கவலைப்பட மாட்டேன். நாம் டாஸ் என்றால் அவர்களை முதலில் பேட்டிங் செய்ய விட்டு டோட்டலை செட் செய்ய வைக்க வேண்டும். அப்படி செய்து ஹெட் விக்கெட்டை நாம் முதலில் கைப்பற்றினால், அது இந்தியாவின் ஆட்டமாக இருக்கும்”
இதையும் படிங்க : ப்ளீஸ் ஷமி ஸார் ஹெட்டுக்கு இதை பண்ணுங்க.. வருண் சக்கரவர்த்தி பலம் இதுதான் விடாதிங்க – ஹர்பஜன் சிங் அறிவுரை
“இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் தேவையான ரன்னை விட அதிக ரன்கள் எடுக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயத்தில் ஸ்பென்சர் ஜான்சன் முதல் ஸ்பெல் சிறப்பாக இருக்கும். இந்தியா இந்த சுழல் பந்துவீச்சு வரிசையுடன் விளையாடும். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி இழப்பதற்கு எதுவும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.






