ப்ளீஸ் ஷமி ஸார் ஹெட்டுக்கு இதை பண்ணுங்க.. வருண் சக்கரவர்த்தி பலம் இதுதான் விடாதிங்க – ஹர்பஜன் சிங் அறிவுரை

0
159
Harbhajan

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான செமி பைனல் போட்டியில் இந்திய அணியும், முகமது ஷமியும் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அறிவுரைகள் கூறியிருக்கிறார்.

கடந்த மூன்று ஐசிசி தொடர்களாக ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு தனி ஒரு வீரராக மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்திருக்கிறார். இதன் காரணமாக இன்றைய போட்டியிலும் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளும், அச்சமும் இருப்பது உண்மை. தற்போது இதற்கு இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்று ஹர்பஜன் பின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

முகமது ஷமி இதை செய்யுங்க

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது “முதல் விஷயம் டிராவிஸ் ஹெட் பற்றி உங்கள் மனதில் இருக்கும் பயத்தை நீங்கள் அகற்றி விடுங்கள். ஷமி ஸார் ஹெட் இந்திய அணிக்கு எதிராக தேவையான அளவுக்கு மேல் அதிகமாக செய்துவிட்டார். எனவே இந்த முறை அவரை விட்டு விடாதீர்கள். ஆரம்பத்திலேயே அவரை எப்படியாவது அவுட் செய்து விடுங்கள்”

“அவர்களிடம் மேக்ஸ்வெல் மற்றும் இங்லீஷ் என பந்தை நன்றாக அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிறப்பாக பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடிக்கிறார்கள். அவர்களை வேகமாக அடிக்க பந்துவீச்சில் வாய்ப்பு தராதீர்கள். மூன்றாவதாக இது ஒரு நாக் அவுட் போட்டி. எனவே புதிதாக எதையும் முயற்சி செய்ய தேவையில்லை. நீங்கள் இதுவரை விளையாடிய விதத்திலேயே விளையாடுங்கள்”

- Advertisement -

வருண் சக்கரவர்த்தியின் மேஜிக் காரணம்

“வருண் சக்கரவர்த்தியின் மேஜிக் போர்ஷன் எதுவென்றால், அவர் இதுவரையில் அதிகம் கிரிக்கெட் விளையாடியது கிடையாது. எனவே அவரை அதிக வீரர்கள் விளையாடியதும் கிடையாது. இதன் காரணமாக எப்படி அவரை விளையாட வேண்டும்? என்று யாருக்கும் தெரியாது. இதுதான் அவரை ஸ்பெஷலானவராக மாற்றுகிறது”

இதையும் படிங்க : ரோகித் உங்களுக்கு வேணாமா?.. அப்ப மாடலிங் பண்றவங்கள கூட்டிட்டு வாங்க – கவாஸ்கர் விமர்சனம்

“பொதுவாக நீங்கள் சுழல் பந்துவீச்சை விளையாடும் பொழுது, பவுலரின் கையை பார்க்க வேண்டும். ஆனால் நியூசிலாந்து வீரர்கள் வருண் சக்கரவர்த்தியின் கையை பார்க்கவில்லை. மேலும் வருண் சக்கரவர்த்தி பந்து வீசும் பொழுது பந்து எந்த பக்கம் செல்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை. இது அவரை சிறந்தவராக காட்டுகிறது. எனவே நான்கு சுழல் பந்துவீச்சாளர்களுடன் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -