நடப்பு டிஎன்பிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் நெல்லை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் திண்டுக்கல் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மன்கட் செய்யப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி சில கிரிக்கெட் ஒழுக்கங்களாலும் அதிக கவனம் பெறக்கூடியவர். குறிப்பாக 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் பஞ்சாப் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிகொண்டிருந்த ஜாஸ் பட்லர் அஸ்வின் பந்து வீச வருவதற்கு முன்பாகவே பட்லர் க்ரீசை விட்டு வெளியேறியதால் அஸ்வின் பட்லரை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து நடுவரிடம் முறையிட்டார்.
அப்போதே இந்த நிகழ்வு சர்ச்சையான நிலையில், கிரிக்கெட் வட்டாரத்தில் அஸ்வினுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் கிரிக்கெட் விதிப்படி இது முற்றிலும் சரியானது. ஒரு பந்து வீச்சாளர் பந்துவீச வருவதற்கு முன்பாக பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறினால் அவரை அவுட் ஆக்கலாம் என்ற விதியும் உண்டு.
ஆனால் அந்த நிகழ்வு தற்போது அஸ்வினுக்கு நடைபெற்று இருப்பது சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது. நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கேப்டனான அஸ்வின் நான் ஸ்ட்ரைக்கர் என்டில் இருக்க, நெல்லை அணியின் பந்துவீச்சாளர் மோகன் பிரசாத் பந்து வீச வருவதற்கு முன்பாகவே அஸ்வின் க்ரீசை விட்டு இரண்டு அடிகள் எடுத்து வைக்க, இதை கவனித்த மோகன் பிரசாத் அஸ்வினை எச்சரித்து விட்டு நடுவரிடம் முறையிட்டார். இருப்பினும் அவரது பேட் கிரீசுக்கு மேல் ஆன் தி லைனில்இருக்க அவுட் செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் அஸ்வின் வெளியேறி இருக்க வேண்டும்.
இதை மோகன் பிரசாத் நடுவரிடம் முறையிடாமல் நேரடியாக அவுட் செய்து அப்பீல் செய்திருந்தால் அஸ்வின் ஆட்டம் இழந்து வெளியேறி இருப்பார். ஆனால் இதை செய்யாமல் மோகன் பிரசாத் எச்சரிக்கை விடுக்கும் விதமாக நடுவரிடம் முறையிட்டு இருக்கிறார். வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளை அஸ்வின் செய்து வரும் நிலையில் இது தற்போது அவருக்கே நடந்திருப்பது சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது.
இதையும் படிங்க:2024ல் சாதனை படைத்த முதல் வீரர்.. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜெய்ஸ்வால்.. ரோஹித் சர்மாவை முந்தினார்
இருப்பினும் அஸ்வின் கடைசியாக 13 பந்துகளை எதிர் கொண்டு 15 ரன்கள் குறித்த நிலையில் வெளியேறினார். இருப்பினும் அந்த போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
Ashwin 👀 pic.twitter.com/BnVwc5mree
— Epic Cricket Comments (@CricketEpic) July 29, 2024






