நான் விராட் கோலிய அவமானப்படுத்த அப்படி செய்யல.. ஆனா கிரிக்கெட்ட விட பெருசு யாருமில்ல – அஸ்வின் விளக்கம்

0
156
Ashwin

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 ஐபிஎல் தொடர் சம்பந்தமாக விராட் கோலியை அவமானப்படுத்த வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தான் செய்யவில்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அதிர்ச்சி அளிக்கும் வகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாமல் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடர் ஒன்றில் நீண்ட காலம் கழித்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

2025 ஐபிஎல் விராட் கோலி

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்து விளையாடிய விராட் கோலியின் பேட்டிங் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. விராட் கோலி மொத்தம் 15 போட்டிகளில் 54.75 ரன் ஆவரேஜில், 144.71 ஸ்ட்ரைக்ரேட்டில் 657 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுத்த பொழுது விராட் கோலிக்கு இடம் கொடுக்கவில்லை. இது குறித்து அஸ்வின் மீது ஆர்சிபி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள். தற்போது இதற்கு அஸ்வின் விளக்கம் அளித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

தனிப்பட்ட விஷயம் கிடையாது

இது குறித்து அஸ்வின் பேசும்பொழுது “நாங்கள் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை வெளியிட்டோம். இந்த நேரத்தில் நீங்கள் கருத்துகளில் நான் விராட் கோலியை மறந்து விட்டேன் அல்லது நான் அவரைப் பற்றி பேசவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நிச்சயமாக விராட் கோலி இந்த முறை நன்றாக விளையாடினார். ஆனால் நாங்கள் தேர்ந்தெடுத்த அணியில் அவருக்கு இடமில்லை. இது ஏதோ தனிப்பட்ட விஷயம் என்று நீங்கள் யாரும் தவறாக நினைக்க வேண்டாம்”

இதையும் படிங்க : கருண் நாயர் வேண்டாம்.. இந்த 23 வயசு பையனுக்கு வாய்ப்பு கொடுங்க.. உலகமே அவருக்கு சிப்பி மாதிரி – தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்

“எனக்கு விராட் கோலியை மிகவும் பிடிக்கும். சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து சிறப்பாக விளையாடினார், தற்பொழுது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்டார். சிறந்த இடத்தில் விட்டு சென்று இருக்கிறார். இப்போது இதை அடுத்து யாராவது முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால் விளையாடிய அல்லது விளையாடப் போகும் யாரும் கிரிக்கெட்டை விட பெரியவர்கள் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -