இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடம் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நாளை இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்க இருக்கும் நிலையில் இந்திய பேட்டிங் யூனிட் எவ்வாறு இருக்கும்? பவுலிங் யூனிட்டில் யார் இடம் பெறுவார்கள்? என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. புதிய இந்திய டெஸ்ட் அணி உருவாக்கப்படுவதால் இன்னும் வீரர்கள் மற்றும் அவர்களுக்கான இடங்கள் முடிவாகவில்லை.
மூன்றாவது இடம் யாருக்கு?
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க ஆட்டக்காரராக தற்போதைய கேப்டன் கில் ஆரம்பத்தில் களம் இறங்கினார். பிறகு ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தேர்வானதும் கில் அப்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் கேட்டு தன்னை மூன்றாவது இடத்திற்கு இறக்கி கொண்டார்.
இந்த நிலையில் நான்காவது இடத்தில் விளையாடி வந்த விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கின்ற காரணத்தினால், அந்த இடத்தில் யாரை விளையாட வைப்பது என்பது பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இந்த இடத்தில் இப்பொழுது கில் விளையாடுவார் என்று வெளிப்படையாக தெரிகிறது. எனவே அவருடைய மூன்றாம் இடத்தில் சரியான விரலை விளையாட வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த இடத்திற்கு கருண் நாயரை பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருண் நாயர் வேண்டாம்
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது “ஜெயஸ்வால் எப்பொழுதும் சவாலுக்கு தயாராக இருக்கும் மனிதராக தெரிகிறார். எனவே அவர் துவக்க இடத்தில் வர சாய் சுதர்சன் மூன்றாவது இடத்திற்கு மிக சரியாக இருப்பார். ஐபிஎல் மற்றும் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவருக்கு கிடைத்த மிகக்குறுகிய வாய்ப்புகளில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்”
“சாய் சுதர்சன் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஃபார்மை சிவப்பு பந்துக்கு மாற்ற முடியும். தற்பொழுது ஒரு பெரிய ராஜாவிடம் இருந்து பொறுப்பை கில் வாங்கிக் கொள்கிறார். இது ஒரு பெரிய விஷயம் ஆனா இது அவருக்கு தெரியும். அவர் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமை வெல்ல நினைக்கிறார்”
இதையும் படிங்க : பும்ராவ பார்த்து பயம் கிடையாது.. என் டீமுக்கு அந்த ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிட்டேன் – பென் ஸ்டோக்ஸ் பேச்சு
“கில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் காட்டிய திறமையை சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் காட்ட முடிந்தால் நிச்சயம் உலகம் அவருக்கு ஒரு சிப்பி மாதிரி. மேலும் எட்டாவது இடத்திற்கு சர்துல் தாக்கூர் சரியானவராக இருப்பார். அவர் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர். நிச்சயம் அவர் பேட்டிங் அணிக்கு உதவுவதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






