சவுதி அரேபியா ஐஎல்டி டி20 லீக் ஏலத்தில் அத்தனை யாரும் வாங்காத நிலையில் திடீரென பாதியில் வெளியேறி வந்தது ஏன்? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்திருக்கிறார்.
நேற்று ஐ எல் டி20 லீக் தொடருக்கான ஏலம் நடைபெற்றது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து பெறும்பொழுது இந்த தொடரில் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். அதன்படியே மெகா ஏலத்திலும் தன்னுடைய பெயரை கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த தொடரின் ஏலத்திற்கு தன்னுடைய பெயரை குறைந்தபட்ச தொகையாக 1.06 கோடி ரூபாய்க்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவு செய்திருந்தார். இது அந்தத் தொடரில் ஒரு தனிப்பட்ட வீரரின் குறைந்தபட்ச தொகையில் பெரிய அளவில் இருந்தது. இதன் காரணமாக எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை.
இந்த நிலையில் முதல் சுற்றில் வாங்காத போது இரண்டாவது சுற்றில் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது சுற்றில் தன் பெயர் வரவேண்டாம் என ஏலத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த நிலையில் அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் பிக்பேஸ் டி20 லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்கு விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார். தற்போது இந்த ஒப்பந்தம் குறித்து பேசியிருக்கும் அவர் தான் சிட்னி தண்டர் அணிக்கு விளையாடுவேன் என உறுதி அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க : யுவராஜ் சிங் சொன்ன வார்த்தைய.. சூர்யா பாய்க்காக கேட்கல.. பேட்டிங்க மாத்திட்டேன் – அபிஷேக் ஷர்மா பேட்டி
இதுகுறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் “என் மதிப்புக்கு சரியான குறைந்தபட்ச விலை அதுதான் என நான் நினைத்தேன். ஒருவேளை என்னுடைய இந்த விலையை அதிகமாக யாராவது நினைத்து என்னை வாங்காவிட்டால், இந்த வயதில் நான் விளையாடாமல் இருப்பதற்கு மகிழ்ச்சிதான் அடைகிறேன். சிட்னி தண்டர் அணிக்கு ஒப்பந்தம் ஆகிவிட்டதால் இந்த ஏலத்தில் இருந்து விலக நினைத்தேன். ஏற்கனவே இந்த தொடருக்கு வருவேன் என்று சொல்லி வாக்கு கொடுத்து இருந்ததால் வந்தேன். ஆனால் அடிப்படை விலையை குறைக்க நான் விரும்பவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.